ரஜினியின் நன்றி டுவீட்டில் மிஸ் ஆன பிரதமர் மோடி பெயர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று தனது 70வது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் முக ஸ்டாலின் உள்பட தமிழக அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் ஒரு சிலர் ரஜினிக்கு போன் மூலம் வாழ்த்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி ஏராளமான திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் அவருக்கு சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துக்களை கூறிவந்தனர்.
இந்த நிலையில் தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றியை ட்வீட் ஒன்றின் மூலம் ரஜினி பதிவு செய்துள்ளார். ரஜினி சற்று முன் பதிவு செய்த ட்விட்டில் கூறியிருப்பதாவது:
இன்று என்னை வாழ்த்திய மதிப்பிற்குறிய தமிழக முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும், துணை முதல்வர் திரு ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்கும், எதிர்கட்சி தலைவர் திரு முக ஸ்டாலின் அவர்களுக்கும் மத்திய மற்றும் மாநில அரசியல் நண்பர்களுக்கும் என் நலம் விரும்பிகளுக்கும் சக திரை கலைஞர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் மற்றும் உற்சாகத்துடன் எனது பிறந்தநாளை கொண்டாடி வரும் உலகெங்கிலுமுள்ள என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் மோடி தனது டுவிட்டரில் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்த நிலையில் ரஜினியின் நன்றி டுவிட்டில் பிரதமர் மோடியின் பெயர் மிஸ் ஆகி இருப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
???? pic.twitter.com/Jfu22lGsyt
— Rajinikanth (@rajinikanth) December 12, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com