ரஜினியின் நன்றி டுவீட்டில் மிஸ் ஆன பிரதமர் மோடி பெயர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று தனது 70வது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் முக ஸ்டாலின் உள்பட தமிழக அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களது சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்தனர். மேலும் ஒரு சிலர் ரஜினிக்கு போன் மூலம் வாழ்த்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி ஏராளமான திரையுலக பிரபலங்களும் ரசிகர்களும் அவருக்கு சமூக வலைதளங்கள் மூலம் வாழ்த்துக்களை கூறிவந்தனர்.

இந்த நிலையில் தனக்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் தனது மனமார்ந்த நன்றியை ட்வீட் ஒன்றின் மூலம் ரஜினி பதிவு செய்துள்ளார். ரஜினி சற்று முன் பதிவு செய்த ட்விட்டில் கூறியிருப்பதாவது:

இன்று என்னை வாழ்த்திய மதிப்பிற்குறிய தமிழக முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும், துணை முதல்வர் திரு ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்கும், எதிர்கட்சி தலைவர் திரு முக ஸ்டாலின் அவர்களுக்கும் மத்திய மற்றும் மாநில அரசியல் நண்பர்களுக்கும் என் நலம் விரும்பிகளுக்கும் சக திரை கலைஞர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் மற்றும் உற்சாகத்துடன் எனது பிறந்தநாளை கொண்டாடி வரும் உலகெங்கிலுமுள்ள என்னை வாழ வைக்கும் தெய்வங்களான ரசிகப் பெருமக்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரதமர் மோடி தனது டுவிட்டரில் ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்த நிலையில் ரஜினியின் நன்றி டுவிட்டில் பிரதமர் மோடியின் பெயர் மிஸ் ஆகி இருப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.

More News

வெளியேறும் ரமேஷை விடைபெற கூட அனுமதிக்காத கமல்: அன்பு குரூப் அதிர்ச்சி!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் இரண்டு பேர் வெளியேற்றப்படவிருக்கும் நிலையில் அந்த இரண்டு பேரில் ஒருவர் ரமேஷ் என ஏற்கனவே தகவல் வெளியான நிலையில்

அசர வைக்கும் காரணம்… டைம் இதழின் 2020 ஹீரோக்கள் பட்டியலில் இடம்பெற்ற இந்திய அமெரிக்கர்!!!

அமெரிக்காவின் மிக பிரபலமான பத்திரிக்கை டைம் இதழ். இந்த ஆண்டுக்கான சிறந்த மனிதர்களை தேர்வு செய்து அட்டைப் படத்தை நேற்று வெளியிட்டது

தனியார் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வா??? அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!!

தமிழகத்தில் தனியார் பள்ளிகள் விரும்பினால் அரையாண்டு தேர்வுகளை ஆன்லைனில் நடத்திக் கொள்ளலாம் எனப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து உள்ளார்.

பிறந்த நாளன்று விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங்…

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் யுவராஜ்சிங் தன்னுடைய பிறந்த நாளன்று டெல்லியில் நடந்து வரும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உள்ளார்.

கமல், ரஜினியை அடுத்து சட்டமன்ற தேர்தலில் குதிக்கும் பிரபல ஹீரோ: தனிக்கட்சியா?

தமிழகத்தில் அரசியல் ஆளுமைகளாக இருந்த கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவரும் அடுத்தடுத்து காலமானதை அடுத்து ஆளுமைக்கான வெற்றிடம் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது.