மத்திய அமைச்சருக்கு நன்றி கூறிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்!
Send us your feedback to audioarticles@vaarta.com
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்காரியால் அவர்களுக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் ரமேஷ் பொக்காரியால் அவர்கள் செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தின் முதலாவது இணை இயக்குனராக ஆர் சந்திரசேகரன் என்பவரை நியமனம் செய்தார். அமைச்சரின் இந்த நியமனத்திற்கு தமிழக அரசியல் தலைவர்கள் நன்றி தெரிவித்தனர்.
மேலும் இதுகுறித்த தகவலை அமைச்சர் தனது டுவிட்டில் தெரிவிக்கும்போது பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர்களை அடுத்து ரஜினிக்கும் டேக் செய்திருந்தார். இந்த விஷயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. தமிழக முதல்வருக்கு அடுத்த இடம் ரஜினிக்கா? என தொலைக்காட்சிகளில் விவாதங்களும் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மத்திய செம்மொழித் தமிழாய்வு நிறுவனத்துக்கு புதிய இயக்குநரை நியமனம் செய்ததற்கு ரஜினிகாந்த் தனது நன்றியை தெரிவித்துள்ளார். தமிழ் மொழியை மேலும் வலுப்படுத்தவும், இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளின் வளர்ச்சிக்கும் மத்திய அரசு பாடுபட்டு வருவதாக அமைச்சர் ரமேஷ் பொக்காரியால் அவர்களை ரஜினிகாந்த் புகழ்ந்துள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com