நெருங்கிய நண்பர் வீட்டிற்கு திடீர் விசிட் அடித்த ரஜினிகாந்த்.. மீண்டும் ரஜினி மக்கள் மன்றமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகர் ரஜினிகாந்த் திடீரென தனது நெருங்கிய நண்பர் வீட்டிற்கு விசிட் செய்த புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் நெருங்கிய நண்பர்களில் ஒருவர் ராஜு மகாலிங்கம் என்பதும் இவர் லைகா நிறுவனத்தில் தலைமைச் செயல் அதிகாரியாக பணிபுரிந்த நிலையில் திடீரென அவர் அந்த பதவியை ராஜினாமா செய்துவிட்டு ரஜினி மக்கள் மன்றத்தின் மாநில பொதுச் செயலாளராக கடந்த 2018 ஆம் ஆண்டு நியமனம் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்போது ரஜினி அரசியலுக்கு வருவதாக இருந்த நிலையில் அவரது அரசியல் ஆலோசகராக ராஜு மகாலிங்கம் இருப்பார் என்றும் கூறப்பட்டது. இந்த நிலையில் ரஜினி அரசியலுக்கு வரும் முடிவை கைவிட்ட பின்னர் ரஜினி மக்கள் மன்றம் குறித்த செய்திகளும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் ராஜு மகாலிங்கம் ரஜினியின் நெருங்கிய நட்பு வட்டாரத்தில் ஒருவராக இருந்து வரும் நிலையில் அவர் சமீபத்தில் தனது புதிய வீட்டில் கிரகப்பிரவேசத்தை நடத்தி உள்ளார். அப்போது அவர் ரஜினிக்கு அழைப்பு விடுத்த நிலையில் கண்டிப்பாக ஒருநாள் உங்கள் வீட்டுக்கு வருகிறேன் என்று வாக்குறுதி அளித்ததாகவும் மில்லியன் கணக்கானோர் அவரை நேரில் பார்க்க காத்திருக்கும் நிலையில் கடவுள் அருளால் எங்களுடைய வீட்டிற்கு அவர் வருகை தந்தார் என்றும் அவர் வருகை தந்ததை வார்த்தைகளால் என்னால் விவரிக்க முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.
மேலும் தேங்க்ஸ் தலைவா என்றும் அவர் குறிப்பிட்டுள்ளதோடு ரஜினி தனது வீட்டிற்கு வந்த போது எடுத்த புகைப்படங்களையும் அவர் பதிவு செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. ராஜு மகாலிங்கம் வீட்டிற்கு ரஜினிகாந்த் சென்ற புகைப்படங்களை பார்த்த நெட்டிசன்கள் மீண்டும் ரஜினி மக்கள் மன்றம் உயிர்ப்பிக்கப்படுகிறதா? என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர்.
I Invited him for my house warming, he promised to come someday, Millions are longing to have a glimpse of him, GOD has blessed me with his presence and wishes, No words to express my feelings…….Thanks Thalaiva 🙏🙏🙏 pic.twitter.com/CRftPCf9PU
— Raju Mahalingam (@rajumahalingam) May 5, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments