8 வழிச்சாலை திட்டம் குறித்து ரஜினி அதிரடி கருத்து

  • IndiaGlitz, [Sunday,July 15 2018]

சென்னை-சேலம் 8 வழிச்சாலை அமைக்க மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் இந்த திட்டத்திற்கு பாஜக, அதிமுக தவிர கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 8 வழிச்சாலையால் நிலத்தை இழக்கும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களும் இந்த திட்டத்திற்கு எதிரான போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், '8 வழிச்சாலை அமைக்கப்பட்டால் நாடு முன்னேறும். தொழில் வளம் பெருகும். வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும். எனவே எனது ஆதரவு இந்த திட்டத்துக்கு உண்டு என்று கூறியுள்ளார்.

அதே நேரத்தில் இந்த திட்டத்தால் பாதிக்கப்படுபவர்கள் எதிர்க்கிறார்கள். அவர்களுக்கு உரிய இழப்பீடு அல்லது நிலம் ஆகியவற்றை அரசு வழங்க வேண்டும். பெரும்பாலும் விவசாய நிலத்தை பாதிக்காத வகையில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்' என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார். 

சமீபத்தில் இந்த 8 வழிச்சாலை குறித்த வழக்கு ஒன்றின் விசாரணையின்போது சென்னை ஐகோர்ட் நீதிபதி, இதே கருத்தைத்தான் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சிறுவனின் நேர்மைக்கு ரஜினிகாந்த் கொடுத்த விலைமதிப்பில்லா பரிசு

ஈரோட்டை சேர்ந்த துணி வியாபாரி முகமது யாசின் என்பவரின் மகன் பாட்ஷா பள்ளி அருகே கீழே இருந்த ரூ.500 கட்டு ஒன்றை எடுத்து அவரது ஆசிரியரிடம் ஒப்படைத்துள்ளார்.

தங்கமங்கை ஹிமாதாசுக்கு கிடைத்த புதிய பதவி

பின்லாந்து நாட்டில் நடைபெற்ற நடந்த உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் 400 மீட்டர் ஓட்டத்தில் 51.46 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கம்

'ஜூங்கா' படத்தில் மடோனாவின் கேரக்டர் என்ன?

விஜய்சேதுபதி, சாயிஷா நடிப்பில் இயக்குனர் கோகுல் இயக்கியுள்ள 'ஜுங்கா' திரைப்படம் மிக விரைவில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றதால்

ஸ்ரீரெட்டியின் அடுத்த வீடியோவில் அஜித்

பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி கடந்த சில மாதங்களாக தெலுங்கு திரையுலக பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.

டுவிட்டர் களையெடுப்பால் கமல்-ரஜினிக்கு ஏற்பட்ட நஷ்டம்

உலகின் முன்னணி சமூக வலைத்தளங்களில் ஒன்றான டுவிட்டரில் கோடிக்கணக்கானோர் கணக்கு வைத்துள்ளனர் என்பது தெரிந்ததே. குறிப்பால பிரபலங்கள் பலர் தங்கள் கருத்தை தெரிவிக்க டுவிட்டரை பயன்படுத்துவதால்