8 வழிச்சாலை திட்டம் குறித்து ரஜினி அதிரடி கருத்து
Send us your feedback to audioarticles@vaarta.com
சென்னை-சேலம் 8 வழிச்சாலை அமைக்க மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர். ஆனால் இந்த திட்டத்திற்கு பாஜக, அதிமுக தவிர கிட்டத்தட்ட அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. 8 வழிச்சாலையால் நிலத்தை இழக்கும் விவசாயிகள் மற்றும் பொதுமக்களும் இந்த திட்டத்திற்கு எதிரான போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், '8 வழிச்சாலை அமைக்கப்பட்டால் நாடு முன்னேறும். தொழில் வளம் பெருகும். வேலைவாய்ப்புகளும் அதிகரிக்கும். எனவே எனது ஆதரவு இந்த திட்டத்துக்கு உண்டு என்று கூறியுள்ளார்.
அதே நேரத்தில் இந்த திட்டத்தால் பாதிக்கப்படுபவர்கள் எதிர்க்கிறார்கள். அவர்களுக்கு உரிய இழப்பீடு அல்லது நிலம் ஆகியவற்றை அரசு வழங்க வேண்டும். பெரும்பாலும் விவசாய நிலத்தை பாதிக்காத வகையில் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்' என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
சமீபத்தில் இந்த 8 வழிச்சாலை குறித்த வழக்கு ஒன்றின் விசாரணையின்போது சென்னை ஐகோர்ட் நீதிபதி, இதே கருத்தைத்தான் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments