பிறந்த நாளில் ரஜினியின் அதிரடி அறிவிப்பு: செளந்தர்யா ரஜினி தகவல்!

  • IndiaGlitz, [Sunday,December 12 2021]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் இன்றைய பிறந்த நாளில் அவர் அறிவித்த அதிரடி அறிவிப்பு ஒன்றை அவரது இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது: சூப்பர் ஸ்டார் தலைவர் ரஜினிகாந்த் அவர்கள் இன்று தனது பிறந்தநாளை அடுத்து ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ரஜினிகாந்த் பவுண்டேஷன் என்ற அறக்கட்டளையில் இருந்து ஏழை எளிய, வாழ்வாதாரம் அற்ற 100 மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் தேர்வுகளுக்கு பயிற்சி கொடுக்க முடிவு செய்துள்ளார்.

இந்த பணியை வழக்கறிஞர் சத்திய குமார் மற்றும் சூர்யா ஆகியோர்கள் எடுத்து நடத்த உள்ளனர் என்று அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை அடுத்து ரஜினிகாந்துக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இளம் நடிகையை மணந்த பாடகி சுசித்ராவின் முன்னாள் கணவர்!

தமிழ் திரையுலகின் இளம் நடிகையை பாடகி சுசித்ராவின் முன்னாள் கணவரும் நடிகருமான கார்த்திக் குமார் திருமணம் செய்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

நேற்று கைதட்டி சந்தோஷம் அடைந்த பாவனிக்கு இன்று அதிர்ச்சி: கமல் போடும் குறும்படம்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கடந்த சில நாட்களாக அபினய் மற்றும் பாவனி இடையிலான பிரச்சனை நடந்து வந்தது என்பதும் குறிப்பாக ராஜு மற்றும் சிபியிடம் இது குறித்து ஆவேசமாக கோபப்பட்டார்

கடவுளின் மிகப்பெரிய ஆசீர்வாதம் இது... விராட் கோலியின் உருக்கமான பதிவு!

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி நடிகை அனுஷ்கா தம்பதியினர் இன்று தங்களுடைய 4 ஆம் ஆண்டு

ரஜினி வீட்டின் முன் நள்ளிரவில் பிறந்த நாள் கொண்டாடிய ரசிகர்கள்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று தனது 71 ஆவது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மிஸ்டர் & மிஸஸ் சின்னத்திரை டைட்டில் பட்டம் இந்த ஜோடிக்கு தான்! குவியும் வாழ்த்துக்கள்!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் ஒன்று மிஸ்டர் & மிஸஸ் சின்னத்திரை என்பதும் இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த சில வாரங்களாக ஒளிபரப்பாகி வந்தது என்பதும் தெரிந்ததே.