ஆவணப்பட படப்பிடிப்பில் ரஜினிகாந்த் காயமா? அதிர்ச்சி தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று ஆவணப் படத்தின் படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொண்டார் என்ற செய்தியை காலையில் பார்த்தோம். அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா இந்திய பிரதமர் மோடி உள்பட பலர் நடித்த ’மேன் வெர்சஸ் வைல்ட்’ என்ற ஆவணப்படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார் என்றும் இதன் படப்பிடிப்பு கர்நாடக மாநிலத்தில் உள்ள புலிகள் காப்பகம் ஒன்றில் இன்றும் நாளையும் நடைபெறுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சற்றுமுன் வந்த தகவலின்படி ரஜினிகாந்த் அவர்களுக்கு இந்த ஆவணப்படத்தின் படப்பிடிப்பின்போது காயம் ஏற்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. இருப்பினும் அவருக்கு ஏற்பட்ட காயம் எந்த அளவுக்கு என்பது குறித்த தகவல் இல்லை

இருப்பினும் இந்த ஆவணப்படத்தின் படப்பிடிப்பின்போது மருத்துவர்கள், பாதுகாவலர்கள், காவல்துறையினர், வனத்துறையினர் மற்றும் ரஜினியின் மகளும் இருப்பதால் ரஜினிக்கு எந்த பிரச்சனையும் வராமல் அவர்கள் கவனித்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை ரசிகர்கள் மத்தியில் உள்ளது

ஆனால் அதே நேரத்தில் கர்நாடக வனத்துறை தனது சமூக வலைத்தள பக்கத்தில் ரஜினி காயம் குறித்த தகவலை உறுதிசெய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.