ரஜினி படம் போன்ற அறிமுகக்காட்சி: சிம்புவின் 'ஈஸ்வரன்' படம் குறித்த ஆச்சரிய தகவல்

  • IndiaGlitz, [Tuesday,November 10 2020]

சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஈஸ்வரன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இந்த படத்தின் டீசர் வரும் தீபாவளி அன்று வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ‘ஈஸ்வரன்’ டீசரை சிம்புவின் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினரும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்

இந்த நிலையில் ‘ஈஸ்வரன்’ படத்தில் சிம்புவின் அறிமுக காட்சி, சூப்பர் ஸ்டார் ரஜினியின் ’காலா’ படத்தில் வரும் அறிமுக காட்சி போலவே இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. ரஜினியின் ’காலா’ படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கிரிக்கெட் விளையாடுவது போன்ற ஒரு அறிமுக காட்சி இருக்கும். அதே போன்றுதான் ‘ஈஸ்வரன்’ படத்திலும் சிம்பு கிரிக்கெட் விளையாடுவது போன்ற ஒரு அறிமுக காட்சி இருப்பதாகவும், அதேபோல் மோஷன் போஸ்டரில் இருந்த பின்னணி இசைதான் அறிமுக காட்சியின் பின்னணி இசை என்றும் கூறப்படுகிறது. இதனையடுத்து இந்த படத்தின் டீசருக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் இந்த படத்தில் சிம்பு ஜோடியாக நிதி அகர்வால் நடித்துள்ளார். மேலும் முக்கிய கேரக்டர்களில் பாரதிராஜா, பால சரவணன் உள்பட பலர் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

ஆடு நனைகிறதே என ஓநாய் அழுகிறது: விபிஎப் கட்டணத்தை ஏற்ற க்யுப் குறித்து பாரதிராஜா!

விபிஎப் விவகாரம் திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இடையே முடிவுக்கு வராமல் நீண்டு கொண்டே இருக்கும் நிலையில் திடீரென கியூப் நிறுவனம் நவம்பர் மாதம்

நயன்தாரா படத்தை புரமோஷன் செய்யும் யார்க்கர் கிங் நடராஜன்!

லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா நடித்த 'மூக்குத்தி அம்மன்' திரைப்படம் வரும் தீபாவளி அன்று ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. இதற்கான புரமோஷன் பணிகளை ஆர்ஜே பாலாஜி விறுவிறுப்பாக கவனித்து வருகிறார் 

ம.பியில் ஆட்சியைத் தக்க வைப்பது யார்?  தொடரும் பரபரப்பு!!!

கடந்த ஆண்டு நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் வெற்றிப்பெற்று காங்கிரஸ் மத்தியப் பிரதேசத்தில் ஆட்சியை அமைத்தது.

காலரா நோயை வென்ற தமிழகம்… சீரிய நடவடிக்கை மேற்கொண்ட அரசுக்கு குவியும் பாராட்டு!!!

காலரா நோய் பாதிப்பால் தமிழகத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டில் இருந்து ஒருவர் கூட உயிரிழக்கவில்லை என்ற தகவலை தமிழகச் சுகாதாரத்துறை சமீபத்தில் வெளியிட்டு உள்ளது.

பீகார் சட்டமன்றத் தேர்தல்…  ஆட்சி கட்டிலில் ஏறப்போவது யார்???

243 தொகுதிகளைக் கொண்ட பீகார் சட்டமன்றத் தேர்தல் கடந்த சில தினங்களுக்கு முன்பு நடந்து முடிந்தது