பத்திரிகையாளர்களுக்காக ரஜினிகாந்த் கூறிய பால்காரர் கதை:
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று துக்ளக் 50வது ஆண்டு விழாவில் கலந்து கொண்ட போது ஒரு பால்காரர் கதையை கூறினார். அந்த கதை பின்வருமாறு: ஒரு ஊரில் ஒரு பால்காரர் தண்ணீர் கலக்காமல் லிட்டர் 10 ரூபாய்க்கு விற்றுக் கொண்டிருந்தார். அவருக்கு நல்லபடியாக வியாபாரம் நடந்து கொண்டிருந்தது. அந்த நிலையில் திடீரென இன்னொருவர் பாலில் தண்ணீர் கலந்து லிட்டர் 8 ரூபாய் என்று அவர் கடைக்குப் பக்கத்திலேயே இன்னொரு கடை வைத்தார். இரண்டு ரூபாய் குறைவு என்பதால் மக்கள் அவரிடம் சென்று பால் வாங்க தொடங்கினர். இதனை அடுத்து இன்னொருவர் மேலும் கொஞ்சம் தண்ணீர் ஊற்றி லிட்டர் 6 ரூபாய்க்கு விற்பனை தொடங்கினார். இதனால் 10 ரூபாய் பால்காரருக்கு வியாபாரம் அடியோடு குறைந்தது. இருப்பினும் அவர் தண்ணீர் விடாமல் தொடர்ந்து தனக்கென வரும் ஒரு சில வாடிக்கையாளர்களுக்காக வியாபாரம் செய்து கொண்டிருந்தார்
இந்த நிலையில் அந்த ஊரில் ஒரு திருவிழா வந்தது. ஆறு ரூபாய், எட்டு ரூபாய் பால்காரர்களிடம் பால் காலி ஆகிவிட்டது. எனவே பத்து ரூபாய் பால்காரரிடம் திருவிழா குழுவினர் பால் வாங்கி பாயாசம் உள்ளிட்டவைகளை செய்தனர். அந்த பாயாசம் மிகவும் டேஸ்ட்டாக இருந்ததை பார்த்து அதன் பின்னர் அவர் தான் தண்ணீர் கலக்காத பால் விற்பவர் என்பதை முடிவு செய்தனர். இதனை அடுத்து மீண்டும் அந்த பத்து ரூபாய் பால்காரருக்கு வியாபாரம் அதிகரித்தது
எனவே நேர்மையாக வியாபாரம் செய்பவர்களுக்கு என்றுமே என் குறைவிருக்காது. அதேபோல் நேர்மையாக பத்திரிக்கையை நடத்த வேண்டும். செய்தி என்பது பால் மாதிரி அதில் பொய் என்ற தண்ணீரை கலக்காமல் பத்திரிகை நடத்தினால் தான் அந்தப் பத்திரிகை நீடித்து நிற்கும்’ என்று கூறினார். ரஜினிகாந்தின் இந்த பால்காரன் கதை தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments