'ஜெயிலர்' ஆடியோ விழாவில் ரஜினி கூறிய கழுகு-காக்கா கதை.. ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’ஜெயிலர்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்த நிலையில் படக்குழுவினர் அனைவரும் இதில் கலந்து கொண்டனர். இந்த விழாவில் ரஜினியின் பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பாக அவர் கூறிய கழுகு - காக்கா கதை ரசிகர்கள் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்து ரஜினி பேசிய போது ’கழுகு உயர உயர பறந்தாலும் அமைதியாக இருக்கும். ஆனால் காக்கா சும்மா இருக்காது. கழுகை காக்கா சீண்டிக்கொண்டே இருக்கும். ஆனாலும் கழுகு காக்காவை ஒன்றும் செய்யாது. கழுகால் உயரமாக பறக்க முடியும். ஆனால் காக்காவால் ஒரு கட்டத்துக்கு மேல் பறக்க முடியாது. இந்த காக்கா கதையை வைத்து தவறாக சித்தரிக்க வேண்டாம்’ என்றும் அவர் கூறினார்
மேலும் தனக்கு குடிப்பழக்கம் இருந்ததால் தான் தன்னுடைய வாழ்க்கை சூனியம் ஆனது என்றும் சமுதாயத்திற்கு குடிப்பழக்கத்தால் தான் தன்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்றும் எனவே அனுபவத்தில் சொல்கிறேன் தயவு செய்து யாரும் குடிக்காதீர்கள் என்றும் குடிப்பழக்கம் நமக்கு மட்டுமின்றி நமது குடும்பத்தினருக்கும் பாதிப்பு ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தார்.
மேலும் ’ஜெயிலர்’ படத்தில் சில பாடல்கள் ரசிகர்களுக்காக எழுதப்பட்டது என்றும் அதன் வரிகள் தாறுமாறாக இருந்தது என்றும் அவர் கூறினார். மேலும் நான் கடவுள் மற்றும் நல்லவர்களுக்கு மட்டும் பயப்படுகிறேன் என்றும் கடவுளும் ரசிகர்களும் இரும்பு கோட்டையாக என்னை காப்பாற்றி வருகிறார்கள் என்றும் ரஜினிகாந்த் இந்த விழாவில் பேசினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments