இது சாதாரண அடி அல்ல, பிசாசுத்தனமான அசுர அடி: ரஜினிகாந்த் அறிக்கை
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அவ்வப்போது தனது சமூகவலைதளத்தில் முக்கிய விஷயங்கள் குறித்து பதிவு செய்து வரும் நிலையில் கொரோனா வைரஸ் தொற்று குறித்தும் அவ்வப்போது பதிவு செய்துள்ளார். தனிமனித இடைவெளியை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றும் அரசு கூறிய வழிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என்றும் அவர் அவ்வப்போது தனது ரசிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் அறிவுறுத்தியுள்ளார்
இந்த நிலையில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் ரஜினிகாந்த் தற்போது ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். ’ஆரோக்கியம் போச்சுன்னா, வாழ்க்கையே போச்சு’ என்று கூறியிருக்கும் ரஜினிகாந்த், இந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
கொரோனா வைரஸ் தொற்றால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் ஏழை. எளிய மக்களுக்கு இடைவிடாமல் தங்களது உதவிகளை தொடர்ந்து செய்து கொண்டிருக்கும் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கும்,உறுப்பினர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அடிபட்ட உடனேயே அதிக வலி தெரியாது. இப்போது நமக்கு பட்டிருக்கும் கொரோனா எனும் அடி சாதாரண அடி அல்ல. வல்லரசு நாடுகளையே கலங்க வைத்திருக்கும் பிசாசுத்தனமான அசுர அடி. இப்போதைக்கு இது தீராது போல தெரிகிறது. இதனுடைய வலி வருங்காலங்களில் பல விதங்களில் நமக்குப் பல கடுமையான வேதனைகளை தரும்.
உங்களது குடும்பத்தாரின் எல்லா தேவைகளையும் பூர்த்தி செய்து அவர்களை பாதுகாப்பதுதான் உங்களது அடிப்படை கடமை. எந்த சூழலிலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமலும், முகக் கவசத்தை
அணியாமலும் இருக்காதீர்கள்.
ஆரோக்கியம் போச்சுன்னா, வாழ்க்கையே போச்சு
இவ்வாறு ரஜினிகாந்த் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout