செளந்தர்யா திருமணத்தை அடுத்து ரஜினி வெளியிட்ட அறிக்கை

  • IndiaGlitz, [Tuesday,February 12 2019]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் மகள் செளந்தர்யாவின் திருமணம் நேற்று சிறப்பாக நடைபெற்றது. காலையில் நடந்த திருமணத்திற்கும், மாலையில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சிக்கும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சி தலைவர் முக.ஸ்டாலின், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், மாநில அமைச்சர்கள், கமல்ஹாசன் , முகேஷ் அம்பானி உள்ளிட்ட பல பிரபலங்கள் வருகை தந்து மணமக்களை வாழ்த்தினர்.

இந்த நிலையில் தனது மகளின் திருமணத்திற்கு வருகை தந்து வாழ்த்திய அனைவருக்கும் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்து சற்றுமுன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:

என் மகள் சௌந்தர்யா திருமணத்திற்கு நேரில் வந்து வாழ்த்திய முதல்வர், துணை முதல்வருக்கு நன்றி; எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், முகேஷ் அம்பானி குடும்பத்தினர், திருநாவுக்கர்சர், அமர்நாத், கமல்ஹாசன் மற்றும் நண்பர்கள், உறவினர்கள், திரை உலக பிரமுகர்கள், ஊடக நண்பர்க்ள், காவல்துறை நண்பர்கள், திருமண விழாவிற்கு வந்து மணமக்களை வாழ்த்திய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் எனது மனமர்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்' என்று ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.