டிஸ்சார்ஜ் ஆன ரஜினிகாந்த் வெளியிட்ட அறிவிப்பு.. என்ன சொல்லியிருக்கிறார்?
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில், அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட அறிவிப்பு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த மாதம் 30ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருக்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பின் அவர் நேற்று சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்ட நிலையில், இன்று அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக மருத்துவமனை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இந்த நிலையில், மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன ரஜினிகாந்த், தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, "நான் மருத்துவமனையில் இருக்கும்போது, நான் சீக்கிரம் உடல்நலம் பெற என்னை வாழ்த்திய அனைத்து அரசியல் நண்பர்களுக்கும், திரைப்படத் துறையை சார்ந்தவர்களுக்கும், எனது அனைத்து நண்பர்களுக்கும், நல விரும்பிகளுக்கும், பத்திரிகை நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
மேலும், நான் நலம் பெற பிரார்த்தனைகள் செய்த, மனதார வாழ்த்திய, என் மீது அளவில்லா அன்பு வைத்திருக்கும், என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகர்களுக்கும், அனைத்து மக்களுக்கும் எனது உளமாற மனமார நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
— Rajinikanth (@rajinikanth) October 4, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com