'காலா' படம் குறித்து கன்னட அமைப்புகளுடன் பேச தயார்: ரஜினிகாந்த்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'காலா' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது. இந்த படத்தை வரவேற்க தற்போது ரஜினி ரசிகர்கள் தயாராக இருக்கும் நிலையில் கர்நாடகாவில் மட்டும் இந்த படம் வெளியாவது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இந்த நிலையில் சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், 'காலா பட விவகாரம் தொடர்பாக கன்னட அமைப்புகள் என்னை வந்து சந்தித்தால் அவர்களுடன் பேச தயார்' என்று கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: '‘காலா படத்தை கன்னட அமைப்புகள் எதிர்ப்பது சரியல்ல. காலா பட விவகாரம் தொடர்பாக கன்னட அமைப்புகள் என்னை வந்து சந்திக்கலாம். காவிரி மேலாண்மை பிரச்சனையில் தீர்ப்பு என்ன இருக்கோ அதை செயல்படுத்த சொன்னேன். அதில் என்ன தவறு?
ஒரு படத்தை பிரச்னையின்றி வெளியிடுவதுதான் வர்த்தக சபையின் வேலை. ஆனால் காலா எதிர்ப்புக்கு கர்நாடக வர்த்தக சபையே உறுதுணையாக இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. காலாவை கர்நாடகாவில் மட்டும் வீம்புக்காக ரிலீஸ் செய்யவில்லை; உலகம் முழுவதும் ரிலீஸ் செய்கிறோம். காலா படம் வெளியாகும் திரையரங்குகளுக்கு முதலமைச்சர் குமாரசாமி பாதுகாப்பு தருவார் என நம்பிக்கை உள்ளது’
இவ்வாறு ரஜினிகாந்த் கூறியுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout