ரஜினிகாந்த் வெளியிட்ட முக்கிய அறிக்கை!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் சற்று முன்னர் ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: எனது பிறந்தநாளன்று என்னை அன்புடன் வாழ்த்திய மத்திய அமைச்சர் அமித்ஷா அவர்களுக்கும், திரு ராஜ்நாத் சிங், திரு நிதின் கட்காரி, பாராளுமன்ற சபாநாயகர் ஓம் பிர்லா, பல மாநில ஆளுநர்களுக்கும், திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கும், திரு ஓ பன்னீர்செல்வம், திரு ஜிகே வாசன், திரு திருநாவுக்கரசர், திரு டிகே ரங்கராஜன், திரு பொன் ராதாகிருஷ்ணன், திரு அண்ணாமலை, திரு அன்புமணி ராமதாஸ், திரு திருமாவளவன், திரு சீமான், திரு தினகரன், திருமதி சசிகலா, அவர்களுக்கும், மற்றும் பல மத்திய மாநில அரசியல் நண்பர்களுக்கும் திரு கமல்ஹாசன், திரு இளையராஜா, திரு பாரதிராஜா, திரு வைரமுத்து, திரு அமிதாப்பச்சன், திரு ஷாருக்கான், திரு வெங்கடேஷ் ஐயர் மற்றும் பல பிரபலங்களும் திரையுலகை சார்ந்த அனைத்து நண்பர்களுக்கும் ஊடக பத்திரிகை நண்பர்களுக்கும் என் நலனுக்காக கோவில்களில் பூஜைகளும் ஹோமங்களும் அன்னதானம் நடத்தி பிரார்த்தனை செய்த என்னை வாழ வைக்கும் தெய்வங்களான என் ரசிக பெருமக்களுக்கும், தமிழக மக்களுக்கும், என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்’ இவ்வாறு ரஜினிகாந்த் அதில் தெரிவித்துள்ளார்
???? pic.twitter.com/rLIo75hotS
— Rajinikanth (@rajinikanth) December 13, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments