நவம்பரில் அரசியல் கட்சி: உறுதி செய்யப்பட்ட தகவலால் ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கடந்த பல ஆண்டுகளாக அரசியலில் ஈடுபடப் போவதாக செய்திகள் வெளிவந்த போதிலும், கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதிதான் அவர் ரசிகர்கள் முன்னிலையில் அரசியலில் குதிக்க இருப்பதை உறுதி செய்தார்

இதன் பின்னர் அரசியல் கட்டமைப்புக்கு தேவையான அடிப்படை பணிகளை அவர் கடந்த மூன்று ஆண்டுகளாக செய்துவந்த நிலையில் வரும் நவம்பரில் அவர் கட்சி ஆரம்பிப்பது உறுதி என செய்திகள் வெளிவந்துள்ளது

இந்த தகவலை மூத்த பத்திரிகையாளரும் ரஜினியின் அரசியல் ஆலோசகருமான கோலாகல ஸ்ரீனிவாஸ் தெரிவித்துள்ளார். நவம்பரில் ரஜினி கட்சி தொடங்குகிறார் என்றும் இதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள் என்றும் இதை வேடிக்கையாக சொல்லவில்லை என்றும் இது உறுதியாக நடக்கும் என்றும் தெரிவித்துள்ளார்

ரஜினிக்கு மிக நெருக்கமான ஒருவரே அவர் வரும் நவம்பரில் கட்சி ஆரம்பிக்கப் போவதாக கூறியிருப்பது ரஜினி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது. மேலும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்தால் நவம்பரில் முதல் மாநாட்டை மதுரையில் நடந்த ரஜினிகாந்த் திட்டமிட்டிருப்பதாகவும் அந்த மாநாட்டில் அவர் கட்சியின் பெயர், கொடி மற்றும் கொள்கைகளை முறைப்படி அறிவிப்பார் என்றும் ரஜினிக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன

ரஜினி நவம்பரில் கட்சி ஆரம்பிக்க இருப்பதாக மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் மூலம் உறுதி செய்யப்பட்ட தகவல் வந்ததால் ரஜினி ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் உள்ளனர்