ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிப்பது எப்போது? கராத்தே தியாகராஜன்
- IndiaGlitz, [Wednesday,July 15 2020]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தான் அரசியலில் குதிப்பது உறுதி என்றும் அரசியல் கட்சி ஆரம்பிப்பது உறுதி என்றும் வரும் சட்டமன்ற பொதுத் தேர்தலில் தனது கட்சி 234 தொகுதிகளிலும் போட்டியிடும் என்றும் கடந்த 2017 ஆம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி தனது ரசிகர்கள் மத்தியில் கூறினார் என்பது தெரிந்ததே
அதன் பின்னர் கட்சி ஆரம்பிப்பதற்கு உண்டான ஏற்பாடுகளை அவர் செய்து வந்தார் என்பதும் ரஜினி மக்கள் மன்றம் என்ற ஒரு அமைப்பை ஆரம்பித்து தமிழ்நாடு முழுவதும் அதன் நிர்வாகிகளை நியமனம் செய்தார் என்பதும் இந்த மன்றம் தான் எதிர்காலத்தில் அரசியல் கட்சியாக உருவாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் ரஜினிகாந்த் கட்சி ஆரம்பிக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறப்பட்ட நிலையில் திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக அவர் இந்த திட்டத்தை தள்ளி போட்டு இருப்பதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் ரஜினிகாந்த் நவம்பர் மாதத்திற்குள் புதிய கட்சியை தொடங்குவார் என கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் கூறியபோது, ‘ரஜினிகாந்த் நவம்பர் மாதத்திற்குள் கட்சி ஆரம்பிப்பார் என்றும், ஸ்டாலின் கூறிய ’ஒன்றிணைவோம் வா’ என்ற திட்டம் மக்களை சென்றடையவில்லை என்றும் ஆனால் ரஜினி கூறிய ’சும்மா விடக்கூடாது’ என்ற கருத்து உலக அளவில் சென்றடைந்தது என்றும் கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார்