கமல் என்னிடம் ரகசியத்தை கூற மறுக்கின்றார். சிவாஜி விழாவில் ரஜினி

  • IndiaGlitz, [Sunday,October 01 2017]

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் மணிமண்டப திறப்பு விழாவில் பேசிய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், கமல்ஹாசன் தன்னிடம் ரகசியத்தை கூற மறுப்பதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்

இந்த விழாவில் ரஜினிகாந்த் பேசியதாவது, 'சிவாஜி ஒரு நடிப்பு சக்கரவர்த்தி. அவருக்கு மணிமண்டபம் அமைத்த தமிழக அரசுக்கும் என்னை இந்த விழாவிற்கு அழைத்த சிவாஜி குடும்பத்தினர்களுக்கும் எனது நன்றி

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஒரு அதிர்ஷ்டசாலி என்பது மீண்டும் நிரூபணமாகியுள்ளது. ஏனெனில் சிவாஜி மணிமண்டபத்தை திறந்து வைக்கும் பெருமை அவருக்கு கிடைத்துள்ளது

சிவாஜி அவர்கள் நடிகர் என்பதால் மட்டும் அவருக்கு மணிமண்டபம் கட்டவில்லை. சுதந்திர போராட்ட வீரர்கள் மற்றும் புராண கதாபாத்திரங்களை நாட்டின் கடைகோடி மக்களுக்கும் தனது நடிப்பால் அவர் கொண்டு சென்றதால்தான் அவருக்கு இந்த மணிமண்டபம்

மேலும் சிவாஜி அவர்கள் நடிகர்கள் அனைவருக்கும் ஒரு அரசியல் பாடத்தை கற்று கொடுத்துள்ளார். அரசியலில் வெற்றி பெற சினிமா ஒன்று மட்டும் போதாது அதையும் தாண்டி ஒன்று வேண்டும் என்பது அவரது அரசியல் தோல்வியில் இருந்து அனைவரும் கற்று கொள்ள வேண்டிய பாடம். அந்த ஒன்று என்ன என்பது மக்களுக்கு மட்டுமே தெரியும். எனக்கு சத்தியமாக தெரியாது. ஒருவேளை கமல்ஹாசனுக்கு தெரிந்திருக்கலாம். ஆனால் அந்த ரகசியத்தை கமல் என்னிடம் கூறமாட்டார் என்கிறார். என்னுடன் வந்தால் சொல்லித்தருகிறேன் என்று கூறுகிறார்' என்று ரஜினிகாந்த் பேசினார்.