நானோ, அமிதாப்போ செய்தால் ரசிகர்கள் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்: ரஜினிகாந்த் பேச்சு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று மறைந்த ஆந்திர முதல்வர் என்டி ராமராவ் அவர்களின் நூறாவது பிறந்த நாள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் என்டி ராமராவ் உடனான தனது நட்பு குறித்து கூறினார். இந்த நிகழ்ச்சியில் அவர் பேசியபோது பிரபல தெலுங்கு நடிகரும் என்டிஆர் மகனுமான பாலையா குறித்து புகழாரம் சூட்டினார்.
நானோ, அமிதாப்போ, ஷாருக்கானோ, சல்மான்கானோ செய்ய முடியாததை பாலையாவால் செய்ய முடியும். எனது நண்பர் பாலையா ஒரே பார்வையில் எதிரியை நடுங்க வைத்து விடுவார். ஒரு கண் சிமிட்டினால் ஒரு வாகனம் வெடித்து 30 அடி உயரம் வரை செல்லும். அதை ரஜினிகாந்தோ, அமிதாப்போ, சல்மான்கானோ செய்ய முடியாது, ஒருவேளை செய்தாலும் ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். பாலையா செய்தால் மட்டுமே ரசிகர்கள் ஏற்றுக் கொள்வார்கள்
தெலுங்கு ரசிகர்கள் அவரை பாலையாவாக பார்க்கவில்லை, மறைந்த என்.டி.ஆர் அவர்களை பாலையா வடிவில் பார்க்கிறார்கள். அவர் அன்பு உள்ளம் கொண்டவர், அவர் திரையுலகிலும் அரசியலும் மென்மேலும் பணியாற்ற ஆண்டவனை பிரார்த்திக்கிறேன் என்று கூறினார்.
இதனை அடுத்து முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குறித்து ரஜினிகாந்த் பேசிய போது ’எனக்கும் சந்திரபாபு நாயுடுவிற்கும் 30 ஆண்டு கால நட்பு உள்ளது. மோகன் பாபு தான் என்னை சந்திரபாபு நாயுடுவை அறிமுகம் செய்து வைத்தார். அது முதல் ஹைதராபாத் வரும்போது அவரை நான் சந்திக்காமல் செல்ல மாட்டேன். நான் அவரை சந்திக்கும் ஒவ்வொரு முறையும் எனக்கு ஏராளமான விஷயங்கள் கிடைக்கும். அவர் இந்திய அரசியலுக்கு அப்பாற்பட்டு சர்வதேச அரசியலிலும் கைதேர்ந்தவர்.
ஐதராபாத் நகரம் தற்போது ஹைடெக் நகரமாக இருக்கிறது என்றால் அதற்கு வித்திட்டவர் சந்திரபாபு நாயுடு தான். அவருடைய முயற்சியின் காரணமாக தான் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஹைதராபாத்தில் துவக்கப்பட்டன. விஷன் 2047 என்ற பெயரில் ஆந்திர மாநிலம் எப்படி இருக்க வேண்டும் என்ற தொலைநோக்கு திட்டத்துடன் சந்திரபாபு நாயுடு அரசியலில் பணியாற்றி வருகிறார்’ என ரஜினிகாந்த் புகழாரம் சூட்டினார்.
SuperStar #Rajinikanth & God Of Masses #Balayya Bond🫂❤️✨pic.twitter.com/v04Qfxh5d7
— Saloon Kada Shanmugam (@saloon_kada) April 28, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com