நானே வீதியில் இறங்கி போராடியிருப்பேன்: கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சியில் ரஜினி ஆவேசம்

  • IndiaGlitz, [Monday,August 13 2018]

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு நடிகர் சங்கம் சார்பில் இன்று மாலை நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், ஸ்டாலின் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் பேசியதாவது:

கருணாநிதி இல்லாத தமிழகத்தை  நினைத்து கூட பார்க்க முடியவில்லை. கருணாநிதியை பின்பற்றி அரசியலுக்கு வந்தவர்கள் லட்சம் பேர்; கருணாநிதியால் தலைவர்களானவர்கள் பல நூறுபேர். இருட்டில் இருந்த பல இதிகாச வீரர்களை பாமரர்களிடம் கொண்டு சேர்த்தவர் கருணாநிதி. அவர் சிவாஜியை ஒரே படத்தில் சூப்பர் ஸ்டாராக்கியவர்

அதிமுக ஆண்டு விழாவின்போது எம்ஜிஆர் படத்தின் அருகே கருணாநிதியின் படத்தையும் வைக்க வேண்டும், ஏனென்றால் அதிமுக உருவாக காரணமாக இருந்தவர் கருணாநிதி. சூழ்ச்சிகள், துரோகங்கள் அனைத்தையும் கடந்து கட்சியை வழிநடத்தியவர் கருணாநிதி; அதிமுக உருவானதே கருணாநிதியால்தான். கருணாநிதியின் இறுதிச் சடங்கிற்கு ஒட்டுமொத்த இந்தியாவே வந்த நிலையில் முதலமைச்சர் வர வேண்டாமா?

மெரினாவில் கருணாநிதிக்கு இடம் கொடுத்த தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்திருந்தால் நானே போராட்டத்தில் இறங்கியிருப்பேன்

இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார். 

More News

கருணாநிதி மறைவுக்கு பின் ரஜினி-ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்ச்சி

திமுக தலைவராக இருந்த கருணாநிதி கடந்த 7ஆம் தேதி சென்னையில் காலமானதை அடுத்து அவரது உடல் மறுநாள் முழு அரசு மரியாதையுடன் சென்னை அண்ணா நினைவிட வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

நிவாரண நிதி: தமிழ் நடிகர்களின் தாராளமும், மலையாள நடிகர்களின் கஞ்சத்தனமும்

கேரளாவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் வரலாறு காணாத கனமழை காரணமாக அந்த மாநிலம் முழுவதும் வெள்ளத்தின் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 40 பேர் பலியாகியுள்ளதாகவும்,

சிலர் செத்தால்தான் நாட்டுக்கு விமோசனம்: தமிழக அமைச்சரின் சர்ச்சை பேச்சு

கருணாநிதி கடந்த வாரம் காலமான சோகத்தில் இருந்து இன்னும் திமுகவினர் மீண்டு வரவில்லை. இந்த நிலையில் அமைச்சர் உதயகுமார், 'சிலர் செத்தால்தான் நாட்டுக்கு விமோசனம்' என்று கூறியுள்ளார்.

போலீஸ் எச்சரிக்கையை மீறி காஜல் அகர்வால் வெளியிட்ட வீடியோ

தற்போது உலகம் முழுவதும் ஆபத்தான டிரெண்ட்டை ஏற்படுத்தி வருவது கிகி சேலஞ்ச் என்பது தெரிந்ததே. காரில் இருந்து திடீரென இறங்கி சாலையில் நடனமாடும் இந்த சேலஞ்சால் விபத்துக்கள்

செக்க சிவந்த வானம்: அரவிந்தசாமி கேரக்டர் அறிவிப்பு

பிரபல இயக்குனர் மணிரத்னம் இயக்கி வரும் 'செக்க சிவந்த வானம்' திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்து தற்போது போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் இரவுபகலாக நடந்து வருகிறது.