70 வயதிலும் எனர்ஜியாக இருக்க 'குறைவு'தான் காரணம்: தர்பார் விழாவில் ரஜினி
- IndiaGlitz, [Saturday,January 04 2020]
70 வயதில் எனர்ஜியாக இருக்க என்ன காரணம் என்பதை நேற்று நடந்த ’தர்பார்’ படத்தின் பிரமோஷன் விழாவில் ரஜினிகாந்த் பேசியுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள ’தர்பார்’ திரைப்படம் வரும் 9ம் தேதி வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் தெலுங்கு புரமோஷன் விழா நேற்று ஹைதராபாத்தில் நடந்தது. இந்த விழாவில் ரஜினிகாந்த்,எ ஏஆர் முருகதாஸ், சுபாஸ்கரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் ரஜினிகாந்த் பேசிய போது ’70 வயதிலும் ஹீரோவாக நடிக்கிறீர்கள் எப்படி? என்று ஒரு சிலர் என்னிடம் கேட்கின்றார்கள். அதேபோல் இந்த வயதிலும் இவ்வளவு எனர்ஜியாக இருக்க ஒரு சில ஆலோசனைகளை நான் சொல்கிறேன். ஆசையை குறைக்க வேண்டும், கவலையைக் குறைக்க வேண்டும், உணவைக் குறைக்க வேண்டும், தூக்கத்தை குறைக்க வேண்டும், பேசுவதை குறைக்க வேண்டும், இவற்றை சரியான முறையை கடைபிடித்தால் எந்த வயதிலும் எனர்ஜியாக இருக்கலாம் என்று ரஜினிகாந்த் பேசினார்.
மேலும் தன் மீது தமிழ் ரசிகர்கள் போலவே தெலுங்கு ரசிகர்களும் அன்பு செலுத்தி வருவது தனது பூர்வ ஜென்ம புண்ணியம் என்று பேசிய ரஜினிகாந்த் தனது திரைப்படங்கள் தமிழில் வெற்றி பெறுவது போலவே தெலுங்கிலும் வெற்றி பெற்று வருவது தனக்கு மிகுந்த சந்தோசம் என்று கூறினார். மேலும் ஒரு திரைப்படம் உருவாகும் போதே மேஜிக் நடக்க வேண்டும் என்றும் அப்படி ஒரு மேஜிக் ஏஆர் முருகதாஸ் இயக்கிய படத்தில் நடந்து உள்ளது என்று தான் நம்புவதாகவும் அதனால் இந்த படமும் வெற்றி பெறும் என்றும் அவர் கூறியுள்ளார்.