கமல்ஹாசனின் மறக்க முடியாத இரண்டு நாட்கள்: ரஜினிகாந்த்
- IndiaGlitz, [Friday,November 08 2019]
கமல்ஹாசனின் பிறந்த நாள் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்ட நிலையில் அவர் தனது தந்தையின் சிலையை நேற்று திறந்து வைத்தார். இந்த நிலையில் இன்று இயக்குனர் திலகம் கே.பாலசந்தரின் சிலையை கமல்ஹாசன் தன்னுடைய புதிய அலுவலகத்தில் திறந்து வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் ரஜினிகாந்த் உள்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்
இந்த விழாவில் பேசிய ரஜினிகாந்த், ‘கமல்ஹாசனுக்கு நேற்றும் இன்றும் மறக்க முடியாத நாள். பெற்ற தந்தைக்கும் கலையுலக தந்தைக்கும் கமல்ஹாசன் சிலை அமைத்துள்ளார்.
என்னைப்போல பல கலைஞர்களுக்கு தந்தை, பிதாமகன், குரு பாலச்சந்தர் அவர்கள்தான். பாலசந்தருக்கு மிகவும் பிடித்த குழந்தை கமல்ஹாசன் தான். கமல்ஹாசனின் ஹே ராம் படத்தையும், அபூர்வ சகோதரர்கள் படத்தையும் பார்த்துவிட்டு நான் ரொம்ப வியந்தேன். அதேபோல் ராஜபார்வை’ என்று டைட்டில் வைத்துவிட்டு கண் தெரியாதவராக் நடிப்பதா? என சிவாஜியே வியந்தார்.
கமல்ஹாசன் புதிய அலுவலகம் திறந்திருப்பதை பார்த்தால் அரசியலுக்கு வந்தாலும் அவர் தனது தாய்வீடான சினிமாவை விடமாட்டார் என்றே தோன்றுகிறது.
இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்