முடியாவிட்டால் ராஜினாமா செய்யுங்கள். வாக்களித்த பின் ரஜினிகாந்த் பேட்டி

  • IndiaGlitz, [Sunday,October 18 2015]

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சற்று முன்னர் தனது வாக்கை பதிவு செய்தார். வாக்களித்த பின்னர் ரஜினிகாந்த் செய்தியாளர்களிடம் பேசியபோது, "அனைவருக்கும் நன்றி.நடிகர்கள் அனைவரும் ஒரே குடும்பம், ஒரே ஜாதி, ஒரே இனம். நமக்குள் என்றைக்கும் ஒற்றுமை இருக்கும். தற்போது ஒரு போட்டி வந்துவிட்டது. இந்த தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்

சமீபத்தில் சில விஷயங்கள் நடந்துவிட்டதால் நடிகர்களுக்குள் ஒற்றுமை இல்லை என ஊடகங்களும், மக்களும் தயவு செய்து நினைக்க வேண்டாம். மேலும் வெற்றி பெற்று பதவிக்கு வருபவர்களுக்கு எனது இரண்டு வேண்டுகோள். ஒன்று யார் வெற்றி பெற்றாலும் முதலில் தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற பெயரை 'தமிழ்நாடு நடிகர்கள் சங்கம்' என்று பெயர் மாற்றவேண்டும். அடுத்ததாக உயிரே போனாலும் வெற்றி பெற்றவர்கள் தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள் அவ்வாறு நிறைவேற்ற முடியாவிட்டால் நீங்கள் உங்கள் பதவியை ராஜினாமா செய்துவிடுங்கள். அது உங்கள் மனதிற்கு நிம்மதியை கொடுக்கும்.

இவ்வாறு ரஜினிகாந்த் கூறினார்.

More News

சீயான் விக்ரமின் 25 ஆண்டுகள். ஒரு சிறப்பு பார்வை

தமிழ்த்திரையுலகில் தான் நடிக்கும் ஒரு கேரக்டருக்காக தன்னையும் தனது உடலையும் வருத்தி, அந்த கேரக்டராக மாறும் ஒரே நடிகர் உலக நாயகன் கமல்ஹாசன் என்பது அனைவரும் ஒப்புக்கொள்ளும் உண்மை...

'சிவப்பு' திரை விமர்சனம்: இலங்கை தமிழ் அகதிகள் குறித்த நேர்மையான பதிவு

தமிழ் சினிமாவில் அண்மைய ஆண்டுகளில் இலங்கைத் தமிழர்களின் துன்பங்களை விவரிக்கும் படங்கள் ஓரளவு கணிசமாக வந்துள்ளன. அந்த வரிசையில் சத்ய சிவா எழுதி இயக்கியிருக்கும் ’சிவப்பு’....

சூர்யாவின் 'பசங்க 2' டிராக் லிஸ்ட் வெளியீடு

'பசங்க' பாண்டியராஜ் இயக்கத்தில் சூர்யா, அமலாபால் சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ள 'பசங்க 2' திரைப்படத்தின் பாடல்கள் நாளை...

நான் கெட்டவனாவே இருந்துட்டு போறேன்: சிலம்பரசன்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தேர்தல் நாளை நடைபெறவுள்ளது. இரு அணிகளும் தேர்தலை சந்திக்க தயார் நிலையில் உள்ளனர்...

சரத்குமார் அணிக்கு குஷ்பு பதிலடி

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் சரத்குமார், விஷால் ஆகிய இரு அணிகளும் கடைசிகட்ட பிரச்சாரங்களில் தீவிரமாக உள்ளனர்...