விமர்சனம் செய்த முதல்வருக்கு 'அதிசயம்-அற்புதம்' தந்த ரஜினிகாந்த்

  • IndiaGlitz, [Monday,November 18 2019]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியலுக்கு வரவிருப்பதாக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் அறிவித்ததில் இருந்து அவரை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். தன்னை கடுமையாக விமர்சனம் செய்பவர்கள் நாகரீகமாக இதுவரை பதிலடி கொடுத்து வந்திருக்கின்றார் சூப்பர் ஸ்டார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக நேரடியாக ரஜினிகாந்தை விமர்சனம் செய்யாத தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், சமீபத்தில் ரஜினிகாந்த் கூறிய வெற்றிடம் குறித்த கருத்துக்கு பதில் கொடுக்கும் பதிலளிக்கும்போது ரஜினிகாந்த் அவர்களை கடுமையாக விமர்சனம் செய்தார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் நேற்று ’கமல்ஹாசன் 60’ விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் தன்னை விமர்சனம் செய்த முதல்வருக்கு ’அதிசயம் அற்புதம்’ என்று கூறி மீண்டும் நாகரீகமாக பதிலடி கொடுத்திருக்கிறார். அவர் இந்த விழாவில் கூறியதாவது: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியை நான்கு மாதம் அல்லது ஐந்து மாதத்திற்கு மேல் நீடிக்காது என்று தமிழகத்தில் உள்ள 99 சதவிகித மக்கள் கூறினார்கள். ஆனால் அதிசயம் அற்புதம் நடந்தது. அவரது ஆட்சியில் நீடித்துக் கொண்டே இருக்கின்றது.

நேற்று அதிசயம் அற்புதம் நடந்தது, இன்றும் அதிசயம் அற்புதம் நடந்ததும் நாளையும் அதிசயம் அற்புதம் நடக்கும் என்று ரஜினிகாந்த் கூறியவுடன் விழாவில் கலந்து கொண்டவர்களின் கைதட்டல் ஒலி விண்ணை பிளந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

கமல்ஹாசன் ஏமாற்ற மாட்டார் என நம்புகிறேன்: விஜய்சேதுபதி

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் திரையுலகிற்கு வந்து 60 ஆண்டுகள் நிறைவு செய்வதை அடுத்து நேற்று அவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. 'கமலஹாசன் 60' என்ற பெயரைக் கொண்ட

விஜய்யுடன் நடிப்பது வேற லெவல் அனுபவம்: 'தளபதி 64'ல் இணைந்த டிவி நடிகை!

தளபதி விஜய் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் 'தளபதி 64' படத்தில் அவ்வப்போது புதிய நட்சத்திரங்கள் இணைந்து வருவது குறித்த செய்திகளை பார்த்து வருகிறோம்.

போதை மருந்து கொடுத்து பலாத்காரம் செய்ததாக நடிகை திடுக்கிடும் புகார்!

மும்பையை சேர்ந்த தொலைக்காட்சி நடிகை ஒருவர், தன்னை துணை நடிகர் ஒருவர் ஏமாற்றி பாலியல் பலாத்காரம் செய்து விட்டதால், தான் கர்ப்பமாக இருப்பதாக போலீசில் புகார் அளித்துள்ளதால்

இலங்கை அதிபர் தேர்தல்: கோத்தபய ராஜபக்சே அபார வெற்றி!

இலங்கை அதிபர் மைத்திரியபால சிறிசேனாவின் பதவிக்காலம் வரும் ஜனவரியுடன் முடிவடைவதை அடுத்து புதிய அதிபரை தேர்வு செய்ய நேற்று பலத்த பாதுகாப்புடன் அந்நாட்டில் தேர்தல் நடைபெற்றது.

ஃபேஸ்புக் நட்பால் விபரீதம்: இளம்பெண்களை ஆபாச புகைப்படம் எடுத்த போலி டாக்டர்!

விசாகப்பட்டினத்தில் சேர்ந்த விசாகா என்ற இளைஞர் எந்த வேலையும் இல்லாமல் சுற்றித் திரிந்த நிலையில், குறுக்கு வழியில் பணம் சம்பாதித்து, குறுகிய நாட்களில் பணக்காரராக முடிவு செய்தார்