விமர்சனம் செய்த முதல்வருக்கு 'அதிசயம்-அற்புதம்' தந்த ரஜினிகாந்த்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அரசியலுக்கு வரவிருப்பதாக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் அறிவித்ததில் இருந்து அவரை பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். தன்னை கடுமையாக விமர்சனம் செய்பவர்கள் நாகரீகமாக இதுவரை பதிலடி கொடுத்து வந்திருக்கின்றார் சூப்பர் ஸ்டார் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக நேரடியாக ரஜினிகாந்தை விமர்சனம் செய்யாத தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், சமீபத்தில் ரஜினிகாந்த் கூறிய வெற்றிடம் குறித்த கருத்துக்கு பதில் கொடுக்கும் பதிலளிக்கும்போது ரஜினிகாந்த் அவர்களை கடுமையாக விமர்சனம் செய்தார் என்பது தெரிந்ததே.
இந்த நிலையில் நேற்று ’கமல்ஹாசன் 60’ விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் தன்னை விமர்சனம் செய்த முதல்வருக்கு ’அதிசயம் அற்புதம்’ என்று கூறி மீண்டும் நாகரீகமாக பதிலடி கொடுத்திருக்கிறார். அவர் இந்த விழாவில் கூறியதாவது: தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் ஆட்சியை நான்கு மாதம் அல்லது ஐந்து மாதத்திற்கு மேல் நீடிக்காது என்று தமிழகத்தில் உள்ள 99 சதவிகித மக்கள் கூறினார்கள். ஆனால் அதிசயம் அற்புதம் நடந்தது. அவரது ஆட்சியில் நீடித்துக் கொண்டே இருக்கின்றது.
நேற்று அதிசயம் அற்புதம் நடந்தது, இன்றும் அதிசயம் அற்புதம் நடந்ததும் நாளையும் அதிசயம் அற்புதம் நடக்கும் என்று ரஜினிகாந்த் கூறியவுடன் விழாவில் கலந்து கொண்டவர்களின் கைதட்டல் ஒலி விண்ணை பிளந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
#Rajinikanth #Kamal60 #KamalHaasan @rajinikanth sir on #UngalNaanKamal60 #Kamal60 pic.twitter.com/yO82KIjpFo
— █ αs??山???? ᵛᵃˡᶤᵐᵃᶤ█ (@ashwin_rafa) November 18, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments