அரசியல் ஆழம் தெரிந்ததால்தான் அமைதியாக உள்ளேன்: ரஜினிகாந்த்

  • IndiaGlitz, [Tuesday,December 26 2017]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று ரசிகர்களை இரண்டாம் கட்டமாக சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சந்தித்து வருகிறார். இந்த நிகழ்ச்சியில் ரஜினியுடன் இயக்குனர் மகேந்திரன் மற்றும் தயாரிப்பாளர் கலைஞானம் ஆகியோர் மேடையில் உள்ளனர்.

ரசிகர்களுடன் புகைப்படம் எடுப்பதற்கு முன்னதாக ரஜினி இந்த நிகழ்ச்சியில் பேசியதாவது: நான் அரசியலுக்கு வருவேனா இல்லையா என்று மக்களை விட ஊடகங்கள் மிகவும் ஆர்வமாக இருக்கின்றன. போர் வரும்போது பார்த்துக் கொள்ளலாம் என்று சொன்னேன், போர் என்றால் தேர்தல் தான். இப்போது என்ன போர் வந்துவிட்டதா? 

நான் சீன் போடுவதாகவும், அரசியல் குறித்த அறிவிப்பை இழுத்து கொண்டே செல்வதாகவும் சிலர் கூறுகின்றனர். நான் அரசியலுக்கு 1996ம் ஆண்டே வந்துவிட்டேன், அரசியல் ஆழம் தெரிந்துதான் அமைதியாக உள்ளேன். இந்த ஆழத்தை தெரியாமல் இருந்திருந்தால் எப்போதோ வந்திருப்பேன்.

யுத்தத்திற்கு போனால் ஜெயிக்கணும். ஜெயிக்ணும்னா வீரம் மட்டும் போதாது, வியூகம் வேண்டும், புத்தியை பயன்படுத்த வேண்டும். நான் அரசியலுக்கு வருவேன் என்று சொல்லவில்லை.. வரும் 31ம் தேதி எனது அரசியல் நிலைப்பாட்டை பற்றி தெரியப்படுத்துவேன்.

என்னுடைய பிறந்த நாள் அன்று இந்த முறை அதிக ரசிகர்கள் என்னுடைய வீட்டின் முன் வந்திருந்தனர், அவர்களை நான் பார்க்க முடியவில்லை மன்னித்து விடுங்கள்.

More News

ஜீவாவுக்கு ஜோடியாகும் அர்ஜூன் ரெட்டி நாயகி

ஜீவா நடித்த 'கலகலப்பு 2' படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் அவர் தற்போது 'கீ' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நிக்கிகல்ராணி அவருக்கு ஜோடியாக நடிக்கின்றார்

நன்றி தெரிவித்த தினகரனுக்கு அதிர்ச்சி பதிலளித்த சுப்பிரமணியன் சுவாமி

நடைபெற்று முடிந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் சுயேட்சையாக போட்டியிட்டு 50 ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்த திராவிட இயக்கங்களை டிடிவி தினகரன் தோற்கடித்தார்.

தனுஷின் 'மாரி 2' இசையமைப்பாளர்: அதிகாரபூர்வ அறிவிப்பு

தனுஷ், காஜல் அகர்வால் நடிப்பில் இயக்குனர் பாலாஜி மோகன் இயக்கிய 'மாரி' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து 'மாரி 2' திரைப்படம் விரைவில் உருவாகவுள்ளது.

11ஆம் வகுப்பு மாணவியை கலெக்டர் இருக்கையில் உட்கார வைத்த கலெக்டர்

திருவண்ணாமலை அருகே செய்யாறு பகுதியில் சமீபத்தில் 10ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவர்களுக்கு பாராட்டு விழா மற்றும் பரிசளிப்பு விழா நடைபெற்றது.

நயன்தாராவுக்கு விக்னேஷ்சிவன் கூறிய நெகிழ்ச்சியான வாழ்த்து

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தமிழில் 'ஐயா' படத்தின் மூலம் அறிமுகமாகியிருந்தாலும் அவருடைய முதல் படம் மனசிநக்கரே (Manassinakkare) என்ற மலையாள படம் ஆகும்.