டிடிவி தினகரனிடம் திடீரென போனில் பேசிய ரஜினிகாந்த்: என்ன காரணம்?
- IndiaGlitz, [Tuesday,February 09 2021]
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனிடம் திடீரென பேசியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா இன்று அதிகாலை சென்னை திரும்பினார் என்பதும் அவர் ராமாவரம் தோட்டத்திற்கு சென்று எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார் என்றும் செய்திகள் வெளியாகியுள்ளன
இந்த நிலையில் உடல் நலக்குறைவு காரணமாக பெங்களூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணமாகிய சசிகலாவின் உடல்நிலை குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தொலைபேசி மூலம் விசாரித்து வருகின்றனர். அந்த வகையில் சசிகலா உடல்நலம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி மூலம் டிடிவி தினகரனிடம் விசாரித்துள்ளார். இதனை தினகரன் இன்று அளித்த பேட்டியில் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சசிகலாவின் உடல்நலம் குறித்து ரஜினிகாந்த் தொலைபேசியின் மூலம் விசாரித்ததாக வெளிவந்த தகவல் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது