விக்னேஷ் சிவனுடன் தொலைபேசியில் பேசிய ரஜினிகாந்த்: காரணம் இதுதான்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் தொலைபேசியில் பேசி உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
வசந்த் ரவி, பாரதிராஜா நடிப்பில், அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகிய ’ராக்கி’ என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் இந்த படத்தை சமீபத்தில் பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் பாரதிராஜா மற்றும் வசந்த் ரவியை நேரில் அழைத்து பாராட்டினார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
இந்த நிலையில் இந்த படத்தை ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள நிலையில் அந்நிறுவனத்தின் உரிமையாளர்களான விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவையும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார். விக்னேஷ் சிவனுடன் தொலைபேசியில் பேசிய ரஜினிகாந்த் தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளதாக வெளிவந்துள்ளது
இதுகுறித்து விக்னேஷ் சிவன் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: தலைவர் ரஜினிகாந்த் அவர்களிடமிருந்து இன்று தொலைபேசி வந்தது. எனக்கும் நயன்தாராவுக்கும் அவர் தனது பாராட்டுக்களை தெரிவித்தார். அவருடைய ஒவ்வொரு வார்த்தையும் எனது காதில் இன்னும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. தலைவர் அவர்கள் கொடுத்த மன உறுதியை வார்த்தைகளால் விளக்க முடியாது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
Got a call from #Thalaivar @rajinikanth ????
— Vignesh Shivan (@VigneshShivN) December 25, 2021
His appreciation for me & Nayan for presenting #Rocky his words about the film are still ringing in my ears!
This gesture of #Thalaivar gives us so much confidence. The feeling is just unexplainable??
JobWellDone @Rowdy_Pictures https://t.co/jGliGyg10Q
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com