கேப்டன் யார் என்பதை காலம் முடிவு செய்யும்: ரஜினி அரசியல் பிரவேசம் குறித்து அரசியல் பெண் பிரமுகர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் வரும் நவம்பர் மாதம் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கி அரசியல் களத்தில் குதிக்கவுள்ளார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் அரசியல் கட்சியை தொடங்குவதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாகவும் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்த உடன் அவர் அரசியல் கட்சி தொடங்குவது உறுதி என்றும் அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றனர்

இந்த நிலையில் தற்போது அவர் அரசியலுக்கு வரவிருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவரது அரசியல் பிரவேசம் குறித்து அரசியல் தலைவர்கள் பரபரப்பான கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த நிலையில் பாஜக பிரமுகர் வானதி ஸ்ரீனிவாசன் அவர்கள் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து கருத்து தெரிவிக்கையில் ’அரசியல் களத்தில் கூடுதல் வீரராக ரஜினிகாந்த் வரவேண்டும் என்றும் அதன்பின் கேப்டன் யார் என்பதை காலம்தான் முடிவு செய்யும்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார். வானதி சீனிவாசன் அவர்களின் இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

ஏற்கனவே ரஜினி அரசியலுக்கு வர வேண்டும் என்று தான் விரும்புவதாக பாஜக தமிழக தலைவர் எல்.முருகன் அவர்கள் கூறியிருந்தார் என்பதும், ரஜினி விருப்பப்பட்டால் அவர் அரசியல் கட்சி தொடங்கியவுடன் பாஜக உடன் கூட்டணி வைக்கலாம் என்று நயினார் நாகேந்திரன் அவர்களும் கூறியிருந்தார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது

More News

ஐசியூவில் கேக் வெட்டிய எஸ்பிபி: குடும்பத்தினர், டாக்டர்கள் மகிழ்ச்சி

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கொரோனோ வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில்

'தனுஷ் 43' படம் குறித்து சூப்பர் அப்டேட் தந்த ஜிவி பிரகாஷ்!

தனுஷின்'அசுரன்' மற்றும் 'பட்டாஸ்' ஆகிய இரண்டு திரைப்படங்களும் சூப்பர்ஹிட்டாகிய நிலையில் தற்போது அவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய'ஜெகமே தந்திரம்' மற்றும் மாரி செல்வராஜ் இயக்கிய 'கர்ணன்

ஆசிரியர் கேரக்டர்களில் அசத்திய தமிழ் திரையுலக பிரபலங்கள்!

இன்று நாடு முழுவதும் ஆசிரியர்கள் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் ஆசிரியர் கேரக்டர்களில் நடித்தது குறித்து தற்போது பார்ப்போம்

நடிகை குஷ்புவின் டிசைன் டிசைனான மாஸ்க் புகைப்படங்கள்: இணையத்தில் வைரல்

இந்த கொரோனா வைரஸ் காலத்தில் மாஸ்க் அணிவது என்பது இன்றியமையாத ஒன்று என்றும், உலக சுகாதார மையம் முதல் உள்ளூர் சுகாதாரத்துறை வரை மாஸ்க் அணிதல்

நள்ளிரவில் தீப்பிடித்து எரிந்த வீடு- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சோகம்!!!

சேலம் அடுத்த குரங்குசாவடியில் வீடு ஒன்று நள்ளிரவில் தீப்பிடித்து எரிந்த சம்பவத்தில் ஒரேகுடும்பத்தைச் சார்ந்த 5 பேர் உயிரிழந்த கோரச் சம்பவம் நடைபெற்று இருக்கிறது.