திருவண்ணாமலை மண் சரிவில் 7 பேர் உயிரிழந்த சம்பவம்: ரஜினிகாந்த் கொடுத்த ரியாக்சன்..!

  • IndiaGlitz, [Monday,December 09 2024]

சமீபத்தில் திருவண்ணாமலையில் மண் சரிவு ஏற்பட்டு ஒரே வீட்டில் இருந்த ஏழு பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கிய நிலையில், இந்த சம்பவத்திற்கு ரஜினிகாந்த் தனது அதிர்ச்சியை தெரிவித்துள்ளார்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’கூலி’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில், இந்த படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்பு ஜெய்பூரில் நடைபெற உள்ளது.

இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வதற்காக ரஜினிகாந்த் ஜெய்ப்பூர் செல்வதற்காக இன்று சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது செய்தியாளர்கள் அவரை சந்தித்து ’கூலி’ படம் குறித்த பல்வேறு கேள்விகள் கேட்டபோது, அதற்கு அவர் பதில் கூறினார்.

அதன் பின்னர் சமீபத்திய புயலின் போது திருவண்ணாமலையில் ஏற்பட்ட மண்சரிவால் 7 பேர் உயிரிழந்த சம்பவம் குறித்த கேள்விக்கு பதில் அளித்த ரஜினிகாந்த், எப்போ? என்று கேட்டார். அதன் பின்னர், ஓ மை காட், என்று பதில் அளித்தார். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

திருவண்ணாமலை மண் சரிவு ஏற்பட்டு ஏழு பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கிய நிலையில் உயிரிழந்த குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் நிவாரண நிதி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பாலாவின் 25 ஆண்டு கலைப்பயண விழாவுடன் இன்னொரு விழா: சுரேஷ் காமாட்சி அறிவிப்பு..

இயக்குனர் பாலா கடந்த 1999 ஆம் ஆண்டு 'சேது' என்ற படத்தை இயக்கிய நிலையில் அந்த படம் வெளியாகி 25 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இதனை அடுத்து பாலாவின் 25 ஆண்டுகால திரை

சூப்பர் சிங்கர் மேடையில் ஒலித்த சிறுவனின் ஆசை.. ஒரு கிராமத்தின் பல வருட ஏக்கம் நிறைவேறியது!

ஒரு சின்னஞ்சிறிய  பையன், தன் தாய் தந்தைக்கும் தன் கிராமத்துக்கும் பெருமை சேர்த்துள்ளான்.  சூப்பர் சிங்கர் ஜூனியர் பத்தாவது  சீசன் பார்ப்பவர்கள் அனைவரும் இந்த சிறுவனை அறிந்திருப்பர்.    

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு: துணை முதல்வர் உதயநிதியிடம் கார்த்தி கொடுத்த நிவாரண நிதி..!

 நடிகர் கார்த்தி அவர்கள், ஃபெஞ்சல் புயல் ஏற்படுத்திய பெரும் பாதிப்பால் அவதிப்படும் மக்களின் நிவாரணத்திற்காக, 15 லட்சம்  ரூபாயை துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்களிடம்

அது மட்டும் நடந்தால் விஜய் வாயில் சர்க்கரை போடுவேன்: நடிகை கஸ்தூரி

திமுக கூட்டணி மைனஸ் ஆகும் என்று விஜய் சொன்னது மட்டும் நடந்தால் அவரது வாயில் சர்க்கரை போடுவேன் என்று நடிகை கஸ்தூரி சமீபத்தில் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியது.

உலகின் தலைசிறந்த வாட்ச் மேக்கரை சந்தித்த தனுஷ்.. வைரல் புகைப்படம்..!

உலகின் தலைசிறந்த  சுவிஸ் நாட்டை சேர்ந்த வாட்ச் மேக்கரை இங்கிலாந்து நாட்டில் நடிகர் தனுஷ் சந்தித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.