சூர்யாவின் அடுத்த படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடும் ரஜினி-ஷங்கர் பட நாயகி..!

  • IndiaGlitz, [Friday,November 29 2024]

ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவான படத்தில் நாயகியாக நடித்த நடிகை சூர்யாவின் அடுத்த படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஷங்கர் இயக்கத்தில் உருவான ’சிவாஜி’ என்ற திரைப்படம் கடந்த 2007 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ஸ்ரேயா நடித்திருந்தார் என்பதும் தெரிந்தது.

இந்த நிலையில் நடிகை ஸ்ரேயா தற்போது சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் ’சூர்யா 44’ படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆகியுள்ளதாக சமீபத்தில் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்த பாடல் வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் அந்த பேட்டியில் தெரிவித்து இருந்தார். ’சூர்யா 44’ படத்தில் ஏற்கனவே பூஜா ஹெக்டே நாயகியாக நடித்து வரும் நிலையில், ஸ்ரேயா ஒரு பாடலுக்கு நடனமாடி உள்ளார் என்ற தகவல் ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் அடுத்த ஆண்டு இந்த படம் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கும் இந்த படத்தில் ஜோஜு ஜார்ஜ், கருணாகரன், ஜெயராம் உள்ளிட்டோர் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையில், ஜாக்சன் கலை இயக்கத்தில், பிரவீன் ராஜா காஸ்ட்யூம் டிசைனில், ஜெயிக்கா ஸ்டண்ட் இயக்கத்தில் சபிக் முகமது அலி படத்தொகுப்பில் ஸ்ரேயா கிருஷ்ணா ஒளிப்பதிவில் இந்த படம் உருவாகியுள்ளது. மேலும் இந்த படத்தை 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ஸ்டோன் பென்ச் நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன..