ரஜினிக்காக உக்ரைன் நாட்டை உருவாக்கிய ஷங்கர்

  • IndiaGlitz, [Monday,November 28 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த்வரும் '2.0' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் சமீபத்தில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த படத்தில் இடம்பெற்ற ஒரு மெலடி பாடலை உக்ரைன் நாட்டில் படமாக்க இயக்குனர் ஷங்கர் திட்டமிட்டிருந்தார். ஆனால் ரஜினியின் உடல்நிலையை கருத்தில் கொண்டு இந்த பாடலை இந்தியாவில் படமாக்கி கிராபிக்ஸ் மூலம் உக்ரைன் பின்னணியை ஷங்கர் கொண்டு வரவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இதற்காக கிராபிக்ஸ் வல்லுனர்கள் இரவுபகலாக பணிபுரிந்து வருகின்றனர்.
வரும் 2017ஆம் ஆண்டு தீபாவளி திருநாளில் வெளியாகவுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு 80% முடிவடைந்துவிட்டதாகவும், விரைவில் 100% படப்பிடிப்பை முடித்துவிட்டு போஸ்ட் புரடொக்ஷன்ஸ் பணி தொடங்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது. ரஜினிகாந்த், எமிஜாக்சன், அக்சயகுமார், சுதன்ஷூ பாண்டே, அதுல் ஹுசைல் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தை லைகா நிறுவனம் பிரமாண்டமான பட்ஜெட்டில் தயாரிக்க ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார்.

More News

சரத்குமார் சஸ்பெண்ட் வழக்கில் நீதிமன்றம் அதிரடி முடிவு

முன்னாள் நடிகர் சங்க தலைவர் சரத்குமார், முன்னாள் பொதுச்செயலாளர் ராதாரவி ஆகியோர் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நடிகர்...

நடிகர் சங்கத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள். முழுவிபரம்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 63வது பொதுக்குழு கூட்டம் ஒருசில சிறு சலசலப்புடன் நேற்று முடிவடைந்தது. கருணாஸ் கார் உடைப்பு, விஷால்...

விஜய், விஷாலுடன் முதன்முதலில் மோதும் சந்தானம்

இளையதளபதி விஜய் நடித்த 'பைரவா' மற்றும் விஷால் நடித்த 'கத்திச்சண்டை' ஆகிய திரைப்படங்கள் வரும் பொங்கல் திருநாளில் வெளியாகும்...

சட்டத்தின் வாயிலாக தீர்வு காண்போம். நிரந்தர நீக்கம் குறித்து சரத்குமார்

நேற்று சென்னையில் நடைபெற்ற 63வது தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழுவில் முன்னாள் சங்கத்தலைவர் சரத்குமார் மற்றும் முன்னாள் பொதுச்செயலாளர் ராதாரவி ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டனர்.

சரத்குமார், ராதாரவி நிரந்தர நீக்கம். நடிகர் சங்க பொதுக்குழுவில் நடந்த சில துளிகள்

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் லயோலா கல்லூரியில் நடப்பதாக இருந்து அதன் பின்னர் மிரட்டல் காரணமாக தி.நகரில் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் வளாகத்திலேயே நடந்தது. இந்த பொதுக்குழுவில் திரைப்பட நடிகர்கள்,