தாதா சாகேப் பால்கே விருதை ரஜினிகாந்த் யாருக்கு சமர்ப்பணம் செய்தார் தெரியுமா? வைரல் வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் இன்று தாதா சாகிப் பால்கே விருதை பெறுவதற்காக குடும்பத்துடன் டெல்லி சென்றிருந்தார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் சற்று முன்னர் இந்தியத் துணைக் குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள் ரஜினிகாந்த் அவர்களுக்கு தாதா சாகிப் பால்கே விருதை வழங்கினார். இது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தாதாசாகேப் பால்கே விருது வழங்கிய மத்திய அரசுக்கு தனது நன்றி என்றும் தாதாசாகேப் பால்கே விருதை இயக்குநர் கே பாலச்சந்தர் அவர்களுக்கு சமர்ப்பிக்கின்றேன் என்றும் ரஜினிகாந்த் தெரிவித்தார். மேலும் என்னை அடையாளம் காட்டிய நண்பர் பகதூர் அவர்களுக்கு நன்றி என்றும் என்னை வாழ வைத்த தெய்வங்களாகிய தமிழ் மக்களுக்கும் தனது நன்றி என்றும் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் அவர்களுக்கு துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள் பொன்னாடை போர்த்தி விருது வழங்கியபோது தனுஷ், ஐஸ்வர்யா உள்பட அரங்கினுள் இருந்த அனைவரும் எழுந்து நின்று கைதட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.
தாதா சாகிப் பால்கே விருதை இதற்கு முன்னர் தமிழ் திரைப்பட பிரபலங்கள் ஆகிய கேபாலச்சந்தர் மற்றும் சிவாஜி கணேசன் ஆகியோர் வாங்கி உள்ள நிலையில் மூன்றாவதாக ரஜினிகாந்த் அவர்கள் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக அசுரன் திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது தனுஷ் அவர்களுக்கு வழங்கப்பட்டது என்பதும், அதேபோல் விஜய் சேதுபதி, கலைபுலி எஸ் தாணு, வெற்றிமாறன் ஆகியோர்களுக்கும் தேசிய விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய திரைப்பட விருதுகளில் மிக உயரிய விருதான 'தாதா சாகேப் பால்கே' விருது நடிகர் ரஜினிகாந்திற்கு வழங்கப்பட்டது இயக்குனர் கே.பாலச்சந்தர், நடிகர் சிவாஜி கணேசனுக்கு பிறகு தமிழ் திரைத்துறையில் நடிகர் ரஜினிகாந்த் இந்த விருதை பெற்றார் @rajinikanth #DadasahebPhalkeRajinikanth pic.twitter.com/Zyg9DHN42d
— PRO Kumaresan (@urkumaresanpro) October 25, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout