உபி முதல்வரை சந்திப்பது இந்த சலுகையை பெறவா? செய்தியாளர் கேள்விக்கு ரஜினிகாந்த் பதில்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று இரவு 7 மணிக்கு உத்தரப் பிரதேசம் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் அவர்களை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி நிலையில் முதல்வரிடம் சலுகையை எதிர்பார்க்கின்றீர்கள? என்ற செய்தியாளர் கேள்விக்கு அவர் பதிலளித்தார்
இமயமலை ஆன்மீக பயணத்தை முடித்துக் கொண்டு தற்போது உத்தர பிரதேசத்தில் இருக்கும் ரஜினிகாந்த், அம்மாநில துணை முதல்வர் உடன் ’ஜெய்லர்’ படத்தை இன்று பார்த்தார். இதனையடுத்து இன்று இரவு அவர் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது
இந்த நிலையில் உபியில் செய்தியாளரிடம் பேசிய ரஜினிகாந்த், ‘உபி ராமர் கோவிலுக்கு செல்கிறீர்களா? என்ற கேள்விக்கு, ‘ஆம் நாளை ராமர் கோவிலுக்கு போகிறேன் என்று ரஜினிகாந்த் பதில் அளித்தார்.
இதையடுத்து லக்னோவில் உங்கள் ரசிகர்கள் எல்லாம் உங்களை பார்ப்பதற்கு மிகவும் ஆவலோடு இருக்கிறார்கள் என்று கூறியதற்கு ’ஆமாம் நானும் கேள்விப்பட்டேன்’ என்று தெரிவித்தார்.
இதனை அடுத்து உபி மாநில முதல்வரை நீங்கள் சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த சந்திப்பின்போது அவரிடம் என்ன கோரிக்கை வைக்க போகிறீர்கள்? ’ஜெய்லர்’ படத்திற்கு வரிவிலக்கு கேட்க போகிறீர்களா? என்ற கேள்விக்கு ’இல்லை இல்லை அந்த சலுகை எல்லாம் நான் கேட்கப்போவதில்லை, வெறும் படத்தை மட்டும் பார்க்க சொல்வேன், அவ்வளவுதான்’ என்று கூறினார்
செய்தியாளர் கேள்விக்கு தன் பாணியில் பதில் அளித்த ரஜினிகாந்த் #Rajinikanth𓃵 | #Rajini | #UttarPradesh pic.twitter.com/DjAkG6wSXx
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) August 19, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments