அதிமுக இன்று சொன்னதை 2013ஆம் ஆண்டே சொன்ன ரஜினி!
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் நடைபெற்ற ’கமலஹாசன் 60’ என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி குறித்து பேசியபோது ’முதல்வர் ஆவோம் என எடப்பாடி பழனிச்சாமி கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் என்றும், ஆனால் அதிசயம் நடந்தது என்றும், அது மட்டுமின்றி அவரது ஆட்சி 6 மாதத்தில் கலைந்துவிடும் என்று பலர் நினைத்த நிலையில் தற்போதும் அவரது ஆட்சி தொடர்ந்து அதிசயமாக நடந்து கொண்டிருப்பதாகவும், இதே மாதிரி அதிசயம் நேற்றும் நடந்தது, இன்றும் நடந்தது நாளையும் நடக்கும் என்றும் அவர் தெரிவித்திருந்தார்
ரஜினிகாந்த் அவர்களின் இந்த கருத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உள்பட அதிமுக தலைவர்கள் பலர் கண்டனம் தெரிவித்து வந்த நிலையில் இன்று அதிமுக நாளேடு ஒன்றில் ’கண்டக்டராக வாழ்க்கையை தொடங்கிய ரஜினி, சூப்பர் ஸ்டார் ஆவோம்’ என்று கனவில் கூட நினைத்திருக்க மாட்டார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது
ஆனால் இதே கருத்தை கடந்த 2013 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த விழாவில் ரஜினிகாந்த் பேசி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் அந்த மேடையில் பேசிய போது ’பலருக்கும் அதிசயங்களில் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். ஆனால் அதிசயங்கள் நடக்கும். ஒரு சாதாரண பஸ் கண்டக்டர், இத்தனை உயர்ந்த மனிதர்களோடு ஒரே மேடையில் இருப்பதே அதிசயம் தான்’ என்று கூறியுள்ளார் மொத்தத்தில் ரஜினி கூறிய கருத்தையே அவருக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் அதிமுக நாளேடும் தெரிவித்துளது என்பது குறிப்பிடத்தக்கது
Miracles do happen. Andrae sonnar @rajinikanth ...watch this ... https://t.co/uLnNksYhti pic.twitter.com/pMsB2LxgIm
— bharathnt (@bharath1) November 19, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments