'மஹான்' திரைப்படம் குறித்து ரஜினி கூறியது என்ன? கார்த்திக் சுப்புராஜ் டுவிட்!
Send us your feedback to audioarticles@vaarta.com
விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ’மஹான்’ திரைப்படம் நேற்று அமேசான் ஓடிடியில் வெளியானது என்பது தெரிந்ததே. இந்த படம் தற்போது மிகப் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் அனைத்து ஊடகங்களும் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்களை தந்து கொண்டிருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே இந்த படம் விக்ரம் மற்றும் கார்த்திக் சுப்பராஜ் ஆகிய இருவருக்குமே மேலும் ஒரு வெற்றி படமாக அமைந்துள்ளது என்பதில் சந்தேகமில்லை.
இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் ’மஹான்’ திரைப்படத்தை பார்த்து கூறியது என்ன என்பது குறித்து கார்த்திக் சுப்பராஜ் தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். மிக சிறப்பான திரைப்படம் என்றும், அருமையான நடிப்பு புத்திசாலித்தனமான திரைக்கதை என்று தலைவர் ரஜினிகாந்த் அவர்கள் ’மஹான்’ திரைப்படம் குறித்து கூறியதாகவும் தனது போன் செய்து தனது கருத்தை தெரிவித்த தலைவர் அவர்களுக்கு எனது நன்றி என்றும் கார்த்திக் சுப்பராஜ் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்
இந்த நிலையில் ரஜினியின் ’பேட்ட’ திரைப்படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு திரைப்படத்தை ரஜினியை வைத்து நீங்கள் இயக்க வேண்டும் என கார்த்திக் சுப்புராஜ்க்கு ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
"Excellent movie ... Superb Performances .... Brilliant "
— karthik subbaraj (@karthiksubbaraj) February 11, 2022
Yes.... Thalaivar loveeeed #Mahaan ????
Thanks for your call Thalaivaaa..... ????????
We are Elated!!#ThalaivarLovedMahaan#MahaanOnPrime #MahaanStreamingNow pic.twitter.com/xTBjZCI3Oe
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments