தமிழகத்தில் எந்த ஊடகத்திலும் இந்த செய்தி வரவில்லை: ரஜினிகாந்த் அதிருப்தி
Send us your feedback to audioarticles@vaarta.com
வெளிநாட்டவர்களால் வெகுவாக பாராட்டப்பட்ட தேவாவின் படைப்பு குறித்து தமிழகத்தில் எந்த ஊடகத்திலும் செய்திகள் வெளியாகவில்லை என ரஜினிகாந்த் அதிருப்தியுடன் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் தேனிசை தென்றல் தேவா பிறந்தநாளை எடுத்து அவரது இசை கச்சேரி சென்னை நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெற்றது. இதில் ரஜினிகாந்த், மீனா உள்பட பல திரையுலக நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் கலந்து கொண்டு ரஜினிகாந்த் பேசியபோது, ‘முன்னாள் சிங்கப்பூர் அதிபர் எஸ்.ஆர்.நாதன் என்பவர் தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர் என்றும் அவர் தனது இறுதி சடங்கில் தேவா இசையமைத்த ’பொற்காலம்’ படத்தில் இடம்பெற்ற ’தஞ்சாவூரு மண்ணெடுத்து’ என்ற பாடலை தனது இறுதிச்சடங்கில் ஒலிக்க செய்யும்படி கூறி இருந்தார் என்றும் அதன்படி அவரது இறுதிச் சடங்கின்போது அந்த பாடல் அளிக்கப்பட்டது என்றும் ரஜினிகாந்த் கூறினார்.
சிங்கப்பூர் மட்டுமின்றி மலேசியா தாய்லாந்து உள்பட பல நாடுகளில் இந்த நிகழ்வு குறித்து செய்தியாகப் பரவியது என்றும் தேவா இசையமைத்த பாடலை அந்நாடுகள் மொழிபெயர்த்து ஒளிபரப்பி வருகிறார்கள் என்றும் ரஜினிகாந்த் தெரிவித்தார். ஆனால் தமிழகத்தில் இது குறித்த செய்தி எந்த ஊடகத்திலும் வெளியாகவில்லை என அதிருப்தியுடன் கூறிய ரஜினிகாந்த் இது போன்ற நிகழ்வுகளை கட்டாயம் செய்திகளை வெளியிடுங்கள் என்று கூறியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது ரஜினிகாந்த் கூறியவுடன் சிங்கப்பூர் முன்னாள் சிங்கப்பூர் பிரதமரின் இறுதிச் சடங்கின் போது ‘தஞ்சாவூர் மண்ணு எடுத்து’ பாடல் ஒலித்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுதான் அந்த நிகழ்வு #DevaConcert #DevaHits #Singapore #nathan https://t.co/t2eyV4EMji pic.twitter.com/mQc3busVXE
— ஐடி பொண்ணு ???? (@itponnu) November 21, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments