'கூலி' பட விவகாரம்.. இளையராஜா நோட்டீஸ் அனுப்பியது குறித்து ரஜினிகாந்த் கருத்து..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்க இருக்கும் ’கூலி’ படத்தின் முன்னோட்ட வீடியோ சமீபத்தில் வெளியான நிலையில் அதில் தனது இசை இடம் பெற்றிருப்பதாகவும் அந்த இசையை நீக்க வேண்டும் என்றும் இளையராஜா ’கூலி’ படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து ரஜினிகாந்த் நடித்த கருத்தை தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், அனிருத் இசையில் உருவாக இருக்கும் திரைப்படம் ’கூலி’. இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் ஜூன் மாதம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் இந்த படத்தின் முன்னோட்ட வீடியோ சமீபத்தில் வெளியானது என்பதும் ரஜினியின் அசத்தலான அட்டகாசமான காட்சிகள் அந்த முன்னோட்ட வீடியோவில் இருந்ததை அடுத்து இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தில் ’தங்க மகன்’ படத்தில் இடம் பெற்று இருந்த ’வா வா பக்கம் வா’ என்ற பாடலை பயன்படுத்தியதற்காக இசைஞானி இளையராஜா ’கூலி’ படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார் என்ற செய்தி பரபரப்பை ஏற்படுத்தியது.
இது குறித்து பலரும் தங்களுடைய கருத்துக்களை சமூக வலைதளங்களில் தெரிவித்து வரும் நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களிடம் இன்று இந்த இது குறித்து கருத்து கேட்கப்பட்டது. அதற்கு ரஜினிகாந்த் ’இது தயாரிப்பாளருக்கும் இசையமைப்பாளருக்கும் ஆன பிரச்சனை’ என்று மட்டும் கூறிவிட்டு சென்றுவிட்டார்.
#Coolie | "இசையமைப்பாளருக்கும் தயாரிப்பாளர்ருக்குமான பிரச்னை"
— Senthilraja R (@SenthilraajaR) May 4, 2024
'வா வா பக்கம் வா' பாடல் விவகாரத்தில் ரஜினிகாந்த் பதில் #Rajinikanth | #Ilaiyaraaja | #SunPictures pic.twitter.com/J6oaNSWCIE
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout