'கோட்' படம் பார்த்த ரஜினிகாந்த்.. என்ன சொன்னார் தெரியுமா? வெங்கட் பிரபு நெகிழ்ச்சி..!

  • IndiaGlitz, [Saturday,October 19 2024]

தளபதி விஜய் நடித்த ’கோட்’ திரைப்படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்து பாராட்டியதை அடுத்து, இயக்குனர் வெங்கட் பிரபு நிகழ்வுடன் தனது சமூக வலைத்தளத்தில் செய்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தளபதி விஜய் நடித்த ’கோட்’ திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகி, மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதன் பின் ஓடிடியில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது என்பது தெரிந்த விஷயம்.

இந்த நிலையில், ’கோட்’ திரைப்படம் வெளியான முதல் நாளே பல திரையுலக பிரபலங்கள் இந்தப் படத்தை பார்த்து தங்களது சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்திருந்தனர். அதேபோல், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தற்போது இந்தப் படத்தை பார்த்து, இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

இதை அடுத்து, வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில், நன்றி தலைவா! உங்கள் அழைப்புக்கும், எங்களை பாராட்டியதற்கும், அன்புடன் அழைத்து கொண்டதற்கும் நன்றி. ’கோட்’ படத்தை இதயபூர்வமாக பாராட்டியதற்கு மீண்டும் நன்றி. உங்களுக்கு எப்போதும் நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம். உங்களுக்கு என் முழு அன்பையும் செலுத்துகிறேன், என்று தெரிவித்துள்ளார். இந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'வேட்டையன்’ திரைப்படம் வெளியான நிலையில், அந்த படத்தை தளபதி விஜய் முதல் நாளே பார்த்து, இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் பாராட்டியதும் குறிப்பிடத்தக்கது.

More News

பிக்பாஸ் செளந்தர்யாவுக்கு இப்படி ஒரு காதலா? பிரேக் அப் ஆனது ஏன்?

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளர்களில் ஒருவரான சௌந்தர்யா, தான் ஒருவரை காதலித்ததாகவும், ஆனால் ஒரு பிரச்சனை காரணமாக பிரேக் அப் செய்து விட்டதாகவும், சக போட்டியாளர்களிடம்

ஒரு வருடத்தை பூர்த்தி செய்த 'லியோ'.. லோகேஷ் கனகராஜின் நெகிழ்ச்சி பதிவு..!

தளபதி விஜய் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவான "லியோ" திரைப்படம் கடந்த ஆண்டு இதே நாளில் வெளியான நிலையில், இன்றுடன் ஒரு ஆண்டு நிறைவு பெற்றுள்ளது

இந்த வார எலிமினேஷன் இவர்தான்.. நூலிழையில் தப்பித்த தர்ஷா குப்தா..!

விஜய் டிவியில் பிக் பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய இரண்டு வாரங்கள் ஆகப்போகும் நிலையில், முதலாவது வாரத்தில் ரவீந்தர் எலிமினேஷன் செய்யப்பட்டார் என்பது தெரிந்தது.

அக்டோபர் முதல் டிசம்பர் வரை 6 ராசிகளுக்கான பலன்கள் - ஆதித்ய குருஜி

பிரபல ஜோதிடர் ஆதித்ய குருஜி அவர்கள், ஆன்மீகக்ளிட்ஸ் சேனலுக்கு அளித்த பேட்டியில், அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான 6 ராசிகளுக்கான பலன்களை விரிவாக கூறியுள்ளார்.

பிசினஸ் ஆக மாறிவிட்டதா பிக்பாஸ்? பேக்கேஜ் பேரம் பேசப்படுவதால் பரபரப்பு..!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் இரண்டு சீசன்களில் உண்மையாகவே பார்வையாளர்கள் பிக் பாஸ் போட்டியாளர்கள் குறித்த பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர்.