'கோட்' படம் பார்த்த ரஜினிகாந்த்.. என்ன சொன்னார் தெரியுமா? வெங்கட் பிரபு நெகிழ்ச்சி..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தளபதி விஜய் நடித்த ’கோட்’ திரைப்படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பார்த்து பாராட்டியதை அடுத்து, இயக்குனர் வெங்கட் பிரபு நிகழ்வுடன் தனது சமூக வலைத்தளத்தில் செய்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தளபதி விஜய் நடித்த ’கோட்’ திரைப்படம் கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகி, மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதன் பின் ஓடிடியில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது என்பது தெரிந்த விஷயம்.
இந்த நிலையில், ’கோட்’ திரைப்படம் வெளியான முதல் நாளே பல திரையுலக பிரபலங்கள் இந்தப் படத்தை பார்த்து தங்களது சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்திருந்தனர். அதேபோல், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தற்போது இந்தப் படத்தை பார்த்து, இயக்குனர் வெங்கட் பிரபுவுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதை அடுத்து, வெங்கட் பிரபு தனது எக்ஸ் பக்கத்தில், "நன்றி தலைவா! உங்கள் அழைப்புக்கும், எங்களை பாராட்டியதற்கும், அன்புடன் அழைத்து கொண்டதற்கும் நன்றி. ’கோட்’ படத்தை இதயபூர்வமாக பாராட்டியதற்கு மீண்டும் நன்றி. உங்களுக்கு எப்போதும் நாங்கள் கடமைப்பட்டிருக்கிறோம். உங்களுக்கு என் முழு அன்பையும் செலுத்துகிறேன்," என்று தெரிவித்துள்ளார். இந்தப் பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமீபத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'வேட்டையன்’ திரைப்படம் வெளியான நிலையில், அந்த படத்தை தளபதி விஜய் முதல் நாளே பார்த்து, இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் பாராட்டியதும் குறிப்பிடத்தக்கது.
Thank you, Thalaivaaaa!! for the call and for embracing our #GOAT with so much love. Thanks again for appreciating wholeheartedly. Forever grateful, sending you all the love. ♥️♥️♥️♥️ @rajinikanth 🙏🏽🙏🏽
— venkat prabhu (@vp_offl) October 19, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com