சோபியா விவகாரம்: ரஜினியின் கருத்து இதுதான்

  • IndiaGlitz, [Thursday,September 06 2018]

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் முன்பு விமானத்தில் 'பாசிச பாஜக ஒழிக' என்று கோஷமிட்ட மாணவி சோபிகாவின் விவகாரம் இந்திய அளவில் டிரெண்டில் இருந்தது என்பது தெரிந்ததே

இந்த விவகாரம் பூதாகரமாகி அனைத்து அரசியல் தலைவர்களும் இதுகுறித்து தங்கள் கருத்தை தெரிவித்தனர். மேலும் செய்தி தொலைக்காட்சிகளில் கடந்த இரண்டு நாட்களாக இதுகுறித்துதான் விவாதம் நடந்து கொண்டிருக்கின்றது.

இருப்பினும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இதுகுறித்து தனது கருத்தை இதுவரை தெரிவிக்காமல் இருந்தார். இந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வரும் படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்புக்காக இன்று உத்தரபிரதேசம் செல்ல ரஜினிகாந்த் சென்னை விமான நிலையம் வந்தார். அவரிடம் செய்தியாளர்கள் சோபியா விவகாரம் குறித்து கருத்து கூறுமாறு கேட்டனர். ஆனால் இதுகுறித்து கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்று ரஜினி கூறிவிட்டு சென்றுவிட்டார். அதேபோல் தற்போது குட்கா விவகாரத்திற்காக நடைபெற்று வரும் சிபிஐ ரெய்டு குறித்தும் கருத்து தெரிவிக்க ரஜினிகாந்த் மறுத்துவிட்டார். இதனால் செய்தியாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

More News

விஜய்சேதுபதியின் அடுத்த பட படப்பிடிப்பு முடிந்தது.

விஜய்சேதுபதி இந்த ஆண்டு இதுவரை 'ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன், 'ஜூங்கா' மற்றும் 'இமைக்கா நொடிகள்' ஆகிய மூன்று படங்களில் நடித்துள்ளார்.

பிரபல நகைச்சுவை நடிகர் காலமானார்

தமிழ் சினிமாவின் பிரபல நகைச்சுவை நடிகர் வெள்ளை சுப்பையா நேற்றிரவு உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 78.

என்னால ஒரே ஒரு வார்த்தை மட்டும்தான் பேச முடியும்: சிசிவி ஆடியோ விழாவில் சிம்பு

சிம்புவுக்கு ஒரு மேடை கிடைத்துவிட்டால் மணிக்கணக்கில் பேசுவார் என்பது தெரிந்ததே. அவரது பேச்சில் மனம் திறந்த உண்மை இருக்கும் என்பதால் அவரது பேச்சு காரசாரமாக இருப்பதும் உண்டு

ரித்விகா கொடுக்கும் டாஸ்க்கை செய்ய மறுக்கும் மும்தாஜ்

பிக்பாஸ் வீட்டில் மும்தாஜ் ஒருதலைபட்சமாக பாசம் காட்டி வருவது வெட்ட ஏற்கனவே வெளிச்சமாகிவிட்டது.

ஆஸ்திரேலியாவில் அஜித்தின் 'தக்ஷா' டீம் சாதனை படைக்குமா?

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தை சேர்ந்த தக்ஷா என்ற டிரோன் குழுவிற்கு அஜித் ஆலோசகராக இருந்தார் என்பதும் இந்த டீம் இந்திய அளவில் நடைபெற்ற கல்லூரிகளுக்கான டிரோன் போட்டியில் முதலிடம் பெற்றது