கமல் கட்சிக்கு ஆதரவு கொடுப்பது குறித்து ரஜினிகாந்த் விளக்கம்
- IndiaGlitz, [Tuesday,April 09 2019]
கடந்த இரண்டு நாட்களாக ரஜினியின் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும், ரஜினி ஆதரவு தருவேன் என்று கூறியிருப்பதாகவும், அவர் ஆதரவு தருவார் என்று நம்புவதாகவும் கமல் ஒருசில பேட்டிகளில் கூறியிருந்தார். வரும் மக்களவை தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்று ரஜினிகாந்த் விளக்கமாக கூறியிருந்தும் கமல் இவ்வாறு பேட்டி அளித்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது
இந்த நிலையில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ரஜினிகாந்த், 'என்னுடைய அரசியல் நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை; எனக்கும் கமலுக்கும் உள்ள நட்பை தயவுசெய்து கெடுத்துவிட வேண்டாம்' என்று கூறினார்.
மேலும் நதிகளை இணைப்போம் என்ற பாஜகவின் தேர்தல் வாக்குறுதி வரவேற்கத்தக்கது என்றும் நதிகள் இணைப்பு குறித்து தான் ஏற்கனவே வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது கூறியிருந்ததாகவும், அந்த வகையில் பாஜக தேர்தல் அறிக்கையில் நதிகள் இணைப்பு குறித்து கொடுத்த வாக்குறுதியின்படி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் முதல் வேலையாக நதிகள் இணைப்பை செய்ய வேண்டும் என்றும், அவ்வாறு செய்தால் நாட்டின் வறுமை பாதி குறைந்துவிடும் என்றும் கூறினார்.
மேலும் தேர்தல் நேரம் என்பதால் நான் அதிகம் பேச விரும்பவில்லை என்றும், தயவு செய்து தவறாக எடுத்து கொள்ள வேண்டாம் என்றும் ரஜினிகாந்த் கூறி தனது பேட்டியை முடித்து கொண்டார்.