close
Choose your channels

திருவள்ளுவரும் நானும் காவியில் சிக்க மாட்டோம்: ரஜினி பேட்டி

Friday, November 8, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

திருவள்ளுவரை காவியாக மாற்ற முயற்சித்ததால் தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கும் நிலையில் இன்று கமல்ஹாசன் அலுவலகத்தில் கே.பாலசந்தர் அவர்களின் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்ட ரஜினிகாந்த் இதுகுறித்து தனது கருத்தை தெரிவித்தார்.

திருவள்ளுவருக்கு காவி உடை அணிவித்தது பாஜவின் தனிப்பட்ட விருப்பம்; அதனை சர்ச்சையாக்கி இருக்க வேண்டியதில்லை. திருவள்ளுவரைப் போல எனக்கும் காவிச்சாயம் பூச முயற்சி நடக்கிறது. காவி சாயத்துக்கு திருவள்ளுவரும் சிக்க மாட்டார். நானும் சிக்க மாட்டேன் என்று ரஜினிகாந்த் கூறினார். இதன் மூலம் ரஜினிகாந்த் அரசியலில் குதித்தாலும் பாஜகவுடன் எந்தவித தொடர்பும் வைத்து கொள்ள மாட்டேன்’ என்பதை மறைமுகமாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது

மேலும் வரும் உள்ளாட்சி தேர்தலுக்குள் கட்சி ஆரம்பித்து அதில் உங்களுடைய கட்சி போட்டியிடுமா? என்று நிருபர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ரஜினிகாந்த், ‘உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று கூறினார். இதில் இருந்து அவர் உள்ளாட்சி தேர்தலுக்குள் கட்சி ஆரம்பிக்க போவதில்லை என்று தெரிகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment