நிர்மலாதேவி விவகாரம்: ரஜினி கூறிய கருத்து

  • IndiaGlitz, [Monday,April 23 2018]

 

கடந்த சில நாட்களாக அருப்புக்கோட்டை கல்லூரி பேராசிரியை நிர்மலாதேவி விவகாரம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரத்தால் பொதுமக்கள், ஊடகங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் காவிரி, ஸ்டெர்லைட் பிரச்சனையை கூட மறந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இன்று அமெரிக்கா செல்லவுள்ள நிலையில் சற்றுமுன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் நிர்மலாதேவி விவகாரம் குறித்து கருத்து கூறியபோது, 'நிர்மலா தேவி விவகாரத்தில் விசாரணைக்குபின் குற்றம் நிரூபிக்கப்பட்டால் கடும் தண்டனை வழங்க வேண்டும்' என்று கூறினார். அதேபோல் எஸ்.வி.சேகர் பிரச்சனை குறித்து அவர் கூறுகையில், ''எஸ்.வி.சேகர் பத்திரிக்கையாளர்கள் விவகாரத்தில் தெரிந்து பதிவிட்டாலும் தெரியாமல் பதிவிட்டாலும் அதனை ஏற்றுக் கொள்ள முடியாது' என்று கூறியுள்ளார்.

மேலும் சீருடை அணிந்த காவலர்களை தாக்கியது மன்னிக்க முடியாத குற்றம் என்று அவர் மீண்டும் அழுத்தமாக கூறியுள்ளார். இந்த கருத்துக்கு ஏற்கனவே பாரதிராஜா, சீமான் உள்பட பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.