கமலின் இந்து தீவிரவாத பேச்சுக்கு ரஜினி கூறிய பதில்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தேர்தல் பிரச்சார கூட்டம் ஒன்றில் பேசிய கமல், 'சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி ஒரு இந்து என்றும், அவர் காந்தியை சுட்டு கொலை செய்த நாதுராம் கோட்சே என்றும் பேசினார். அவருடைய இந்த சர்ச்சைக்குரிய பேச்சுக்கு தமிழிசை, எச்.ராஜா, அமைச்சர் ராஜேந்திரபாலாஜி உள்ளிட்ட பல அரசியல்வாதிகளும், விவேக் ஓபராய், காயத்ரி ரகுராம், கஸ்தூரி உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்களும் கண்டனங்களை தெரிவித்தனர். ஆனால் அதே நேரத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, திராவிட கழகத்தலைவர் கி.வீரமணி போன்றோர் கமல் கருத்துக்கு ஆதரவும் தெரிவித்தனர்.
இந்த நிலையில் கமல்ஹாசனின் இந்த பேச்சுக்கு அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கமல்ஹாசனின் கட்சியை தடை செய்ய வேண்டும் என்றும், அவரது பிரச்சாரத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்தில் புகார் செய்யப்பட்டுள்ளது
இந்த நிலையில் கமல்ஹாசனின் 'இந்து தீவிரவாதி' குறித்த கருத்து குறித்து செய்தியாளர்கள் சூப்பர் ஸ்டார் ரஜினியிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் கூறிய ரஜினிகாந்த், 'இதுகுறித்து கருத்து கூற விரும்பவில்லை' என்று கூறினார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments