பாதைகள் வேறு என்றாலும் நோக்கம் ஒன்றுதான்: கமல் அரசியல் குறித்து ரஜினிகாந்த்

  • IndiaGlitz, [Friday,February 23 2018]

சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் இன்று நெல்லை ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்த ரஜினிகாந்த் பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

இன்று திருநெல்வேலி மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளை நேரடியாக சந்தித்து அவர்களின் தேவைகளை தெரிந்து கொண்டேன். அதேபோல் 32 மாவட்ட நிர்வாகிகளையும் தேர்வு செய்துவிட்டு அவர்கள் அனைவரையும் ஒரே நேரத்தில் சந்திப்பேன். அதேபோல் நேரம் வரும்போது நேரடி சுற்றுப்பயணம் செய்து ரசிகர்களை சந்திப்பேன்.

காவிரி விவகாரத்திற்காக கூட்டப்பட்ட அனைத்து கட்சி கூட்டம் வரவேற்கத்தக்கது. இதுவொரு நல்ல தொடக்கம், இப்படித்தான் இருக்க வேண்டும்

கமல்ஹாசனின் அரசியல் பொதுக்கூட்டம் நன்றாக இருந்தது. நான் முழுவதும் அதை பார்த்தேன். நான் ஏற்கனவே அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளேன். இன்று மீண்டும் அவருக்கு நான் வாழ்த்து கூறிக்கொள்கிறேன்.

நானும் கமலும் வேறு வேறு பாதையில் சென்றாலும் எங்களின் நோக்கம் மக்களுக்கு நல்லது செய்வது என்பதுதான். கமல் நல்ல திறமைசாலி, நிச்சயம் அவர் தனது இயக்கத்தை வெற்றிகரமாக வழிநடத்தி செல்வார்.

 

 

More News

கமலிடம் மேட்டர் பற்றி கேட்ட பா ஜ க பிரமுகர்

உலக நாயகன் கமல்ஹாசன் நேற்று முன் தினம் மதுரையில் தனது அரசியல் கட்சியை அறிமுகம் செய்து சிறப்புரையாற்றினார். அப்போது ரசிகர்களின் கேள்விகளுக்கும் அவர் பதிலளித்தார்.

மற்றவர்கள் சத்தம் போட்டால் போடட்டும்: யாரை சொல்கிறார் ரஜினி

ரஜினிகாந்த் அவர்கள் விரைவில் தனது அரசியல் கட்சியை அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ள நிலையில் சற்றுமுன் சென்னை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் நெல்லை மாவட்ட ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்தித்து பேசி வருகிறார்.

கமல்-ரஜினி அரசியலில் கார்ப்பரேட் பிரமுகர்கள்

உலக நாயகன் கமல்ஹாசன் ஏற்கனவே அரசியல் கட்சி தொடங்கிவிட்டு அரசியல் பயணத்தை ஆரம்பித்துவிட்டார். அதேபோல் மிக விரைவில் தனது அரசியல் கட்சி குறித்த அறிவிப்பை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அறிவிக்கவுள்ளார்.

கனடா பிரதமரை வாழ்த்தி வரவேற்ற ஆஸ்கார் நாயகன்

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது குடும்பத்தினர்களுடன் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார்.

நீங்க நிம்மதியா இருக்கிங்களா? அப்ப இந்த வீடியோவை பார்க்காதீங்க: கமல்ஹாசன்

உலக நாயகன் கமல்ஹாசன் நேற்று முன் தினம் அரசியல் கட்சியை ஆரம்பித்து தற்போது கட்சிக்கு உறுப்பினர்களை சேர்க்கும் தீவிர முயற்சியில் உள்ளார்.