இந்தி மொழி திணிப்பு: ரஜினியின் 'துரதிஷ்டவசமான' கருத்து

  • IndiaGlitz, [Wednesday,September 18 2019]

ஒரே நாடு ஒரே மொழி என்பது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் சமீபத்தில் இந்தி மொழியை நாடு முழுவதும் பரப்ப வேண்டும் என்று பேசியதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று சென்னை விமான நிலையத்திற்கு வந்த நடிகர் ரஜினிகாந்திடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேட்டபோது அவர் கூறியதாவது:

ஒரு நாட்டின் முன்னேற்றத்திற்கு பொது மொழி என்பது மிகவும் அவசியம். பொது மொழி இருந்தால் நாட்டின் வளர்ச்சிக்கு உதவும். ஆனால் துரதிஷ்டவசமாக நம் நாட்டில் அது சாத்தியம் இல்லை. இந்தியை திணித்தால் தமிழ்நாடு மட்டுமின்றி தென்னிந்தியாவே ஏற்றுக்கொள்ளாது. ஏன், ஒருசில வட மாநிலங்களும் ஏற்றுக்கொள்ளாது என்று கூறியுள்ளார்.

ரஜினியின் இந்த கருத்துக்கு அரசியல் தலைவர்கள் ஆதரவும் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். துரதிஷ்டவசமாக பொதுமொழி சாத்தியம் இல்லை என்று ரஜினி கூறியதால் அவர் இந்தி மொழியை மறைமுகமாக ஆதரிப்பதாக குறை கூறியும், தமிழகம் மட்டுமின்றி தென்னிந்தியாவே இந்தி மொழி திணிப்பை ஏற்றுக்கொள்ளாது என்று கூறியதால் ரஜினிக்கு ஆதரவு தெரிவித்தும் அரசியல் தலைவர்கள் கருத்து கூறி வருகின்றனர்.