பத்ம விபூஷன் விருது. ரஜினிக்கு வாழ்த்து கூறிய பிரபலங்கள்

  • IndiaGlitz, [Tuesday,January 26 2016]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இன்று பத்ம விபூஷன் விருது மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது என்பது அனைவரும் அறிந்ததே. இதுகுறித்து ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளதாவது, 'இந்த விருது எனக்கு கிடைக்க காரணமாக இருந்த எனது ரசிகர்கள், நண்பர்கள், எனது நலம் விரும்பிகள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன்' என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் ரஜினிகாந்த் அவர்களுக்கு இந்த மாபெரும் விருதுக்கு கிடைத்ததை அடுத்து அவருக்கு பிரபலங்களிடம் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

குறிப்பாக ஆந்திரபிரதேச முதலமைச்சரும் ரஜினியின் நெருங்கிய நண்பருமான சந்திரபாபுநாயுடு, திமுக பொருளாளரும் திமுக தலைவர் கருணாநிதியின் மகனுமான மு.க.ஸ்டாலின், பிரபல நடிகையும் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித்தொடர்பாளருமான குஷ்புவும் தங்கள் சமூக இணையதளத்தில் ரஜினிகாந்த் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். தனக்கு வாழ்த்து தெரிவித்த மூன்று பிரபலங்களுக்கும் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.