கேளிக்கை வரி குறித்து தமிழக அரசுக்கு ரஜினிகாந்த் வேண்டுகோள்

  • IndiaGlitz, [Wednesday,July 05 2017]

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் ஜிஎஸ்டி வரி 28% மற்றும் தமிழக அரசின் வரி 30% என மொத்தம் 58% வரியை திரைத்துறையினர் கட்ட வேண்டிய நிலை உள்ளது. ஒருபக்கம் திரையரங்குகள் மூன்றாவது நாளாக வேலைநிறுத்தம் செய்து வரும் நிலையில் இன்னொரு புறம் முதல்வர் மற்றும் அமைச்சர்களுடன் திரையுலகினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இருப்பினும் அரசு தரப்பில் இருந்து இன்னும் இதுகுறித்த அரசாணை எதுவும் வெளியாகவில்லை.

இந்த நிலையில் இந்த பிரச்சனைக்காக பெரிய நடிகர்களும் குரல் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. நேற்று கமல்ஹாசன் அரசுக்கு எதிராக காட்டமான அறிக்கை ஒன்றினை வெளியிட்ட நிலையில் இன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் தமிழக அரசுக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.

தமிழ் சினிமா துறையில் பணிபுரியும் லட்சகணக்கவர்களின் வாழ்வாதரத்தை கருத்தில் கொண்டு எங்கள் வேண்டுகோளை பரிசீலிக்கும் படி தமிழக அரசை கேட்டு கொள்கிறேன்'' என ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். ரஜினிகாந்த் தற்போது அமெரிக்காவில் உடல்பரிசோதனை செய்து கொண்டு ஓய்வு எடுத்து வருகிறார் என்பது குறிப்ப்பிடத்தக்கது.